டைட்டிலில் என் பேருதான் பர்ஸ்ட்… அப்பவே முத்துராமனுடன் மல்லுகட்டிய ஜெயலலிதா?!

jayalalitha, muthuraman
தமிழ்த்திரை உலகில் யதார்த்தமாக நடித்து பெயரைத் தட்டிச் சென்றவர் நடிகர் முத்துராமன். எந்தவித பந்தாவும் இருக்காது. ஆனால் ஒரு ஹாலிவுட் நடிகருக்கே உரிய தோரணை இருக்கும். அவரையே ஜெயலலிதா சில படங்களில் கடுப்பேற்றியுள்ளார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தாராஜ் என்ன சொல்றாருன்னு பாருங்க.
முத்துராமனும், சிவகுமாரும் பெரிய ஆளா வர வேண்டியவர் என்ன காரணம்னு தெரியல. அவங்க வரல. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துல முத்துராமன், நாகேஷ் இரண்டு பேருமே தமிழ்த்திரை உலகிற்கு புதுசா கிடைச்சவங்க. முத்துராமன் கிடைச்ச இடத்தைத் தக்க வைக்கல. உயர்ந்த மனிதன் படத்துல கிளைமாக்ஸ் சீன்ல சிவகுமார் புகுந்து விளையாடி இருப்பாரு. சிவாஜி ஊசல் ஆடிருப்பாரு.
உயிர் என்ற படத்துல முத்துராமன் பிரமாதமா நடிச்சிருப்பாரு. ஒன்மேன் ஆர்மியா நடிச்சிருப்பாரு. படம் முழுக்க அவருதான். மனைவியை எப்படிக் கொல்லப் போறாருங்கறதுதான் கதை. கடைசியில மனைவிக்கு வச்சிருந்த விஷத்தை இவரு குடிச்சிருவாரு. படத்தோட டைரக்டர் பிரகாசம். அவருக்கு முத்துராமன் மேல அவ்ளோ நம்பிக்கை.
முத்துராமனுக்கு ஜோடியாக 19 படங்களில் நடித்தவர் கே.ஆர்.விஜயா. இதுபற்றி டாக்டர் காந்தாராஜ் சொல்லும்போது தன்னை முன்னிலைப்படுத்துற படங்கள்ல தான் கே.ஆர்.விஜயா நடித்தார். அங்கே வந்து சைடா நிக்கிறதுக்குத் தான் ஹீரோ தேவைப்பட்டாரு. அப்படித்தான் ஜெயலலிதா.
வைரம், சூரியகாந்தி போன்ற படங்களில் முத்துராமனை ஹீரோவா போட்டதுக்குக் காரணம் அந்த அம்மா டாமினேட் பண்றதுக்குத்தான். இன்னும் சொல்லப் போனால் டைட்டில்லயே கூட முத்துராமன் பேரு ரெண்டாவதுதான் வரும். ஆனா இதுக்கெல்லாம் முத்துராமன் கவலைப்படலை. அந்த அம்மா விருப்பப்படுது. பேருதானே. போட்டுக்கட்டும்னு சொன்னார். ஆனா அவருக்குக் கிடைக்க வேண்டிய பேரு கிடைக்கத்தான் செய்தது என்கிறார் டாக்டர் காந்தாராஜ்.