புரமோஷன் விஷயத்துல யோகிபாபு, அஜித், நயன்தாரா செய்வது எல்லாம் நியாயமா? யார் மேல தப்பு?

by sankaran v |   ( Updated:2025-05-07 04:55:04  )
ajith nayanthara yogibabu
X

ajith nayanthara yogibabu

புரொமோஷனுக்கே வர்றது இல்லன்னு பல நடிகர், நடிகைகள் மேல கம்ப்ளைண்டா வருது. இது சினிமாவுக்கு ஆரோக்கியமா? தயாரிப்பாளர் தான் காரணமா? யார் மேல தப்பு? இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

கஜானா பட ஆடியோ ரிலீஸ்சுக்கு யோகிபாபு வரலன்னு தயாரிப்பாளர் ராஜா சொல்லி இருக்காரு. 7 லட்சம் கொடுத்தா தான் யோகிபாபு வருவேன்னு சொல்றாரு அப்படின்னும் காரசாரமா பேட்டி கொடுத்தார் அந்தத் தயாரிப்பாளர். யோகிபாபு தரப்புல இருந்து என்ன சொல்றாங்கன்னா எனக்கு சம்பள பாக்கி 7 லட்சம் இருக்கு. அதைக் கொடுத்தா தான் வருவேன்னு சொல்றதா சொல்றாங்க.

ஒருவேளை சம்பளபாக்கி இருந்து கேட்டுருந்தா அவரு மேல தப்பு இல்ல. சம்பள பாக்கி இல்லாம புரொமோஷனுக்கு வர்றதுக்கு 7 லட்சம் கேட்டுருந்தா அது தப்பு. யோகிபாபுவை ஒரு படத்துல நடிக்க வைக்கிறாங்க. அவரு நடிச்சா நல்லாருக்கும்னு நினைக்கிறாங்க. அந்தத் தயாரிப்பாளர் அவருக்கு 30 லட்சம் கொடுத்து நடிக்க வைக்கிறாங்க.

அவரு நடிச்சா படத்தை புரொமோஷன் பண்ணலாம்னு நினைக்காரு. யோகிபாபு அந்தப் படத்துல நடிக்கிறாரு. அவரு இருந்தா நல்ல வியாபாரம் பண்ணலாம். பப்ளிசிட்டி பண்ணலாம்னு தான் தயாரிப்பாளர் நினைக்கிறாரு. அவரைக் கேட்காம ஆடியோ ரிலீஸ் வைக்க மாட்டாங்க. சின்ன தயாரிப்பாளர் அரும்பாடுபட்டு 2 நாளைக்கு 30 லட்சம் சம்பளமாக கொடுக்காரு.

அதனால எப்படியாவது வந்து இந்த ஆடியோ ரிலீஸ்க்கு வாங்கன்னு சொல்றாரு. அப்போ 10 லட்சம், 20 லட்சம் கொடுத்தா தான் புரொமோஷனுக்கு வருவேன்னு ஒரு நடிகர் சொன்னா தப்பு. யோகிபாபு கேட்டாரான்னு தெரியல. அதுக்கு அவரு வேறு படத்துல நடிச்சாலும் சரி. இன்னைக்கு நான் சென்னைல தான் இருக்கேன். இந்த மாதிரி புரொமோஷனுக்குப் போக வேண்டி இருக்குன்னு எந்தத் தயாரிப்பாளர்கிட்ட சொன்னாலும் அவங்க 2 மணி நேரம் பர்மிஷன் கொடுக்கத்தான் செய்வாங்க.

#image_title

சில நடிகர்கள் கார்த்திக் மாதிரி திட்டம்போட்டே வர்றது இல்ல. உங்க படத்துக்குத் தான் நீங்க புரொமோஷன் பண்றீங்க. இது வேறொரு தயாரிப்பாளர் படம்னு நினைக்காதீங்க. அதுல ஆத்ம திருப்தி இருக்கணும். நடிகரகள்; ரஜினி, விஜயகாந்த் யாரும் தயாரிப்பாளர்களுக்கு எப்பவுமே எந்தப் பிரச்சனையும் கொடுத்தது இல்லை.

அஜித் இது என்னோட பாலிசின்னு சொல்லி புரொமோஷனுக்கு வராம இருக்காரு. அதைப் பாராட்டலாம். அதே நேரம் நயன்தாரா என்னோட சொந்தப் படத்துக்கு புரொமோஷனுக்கு வருவேன். மற்ற படத்துக்கு வர மாட்டேன்னு சொல்றாங்க. அங்க ஒரு தடுமாற்றமான மனநிலை இருக்கு. அந்த மாதிரி எல்லாம் பண்ணவே கூடாது என்கிறார் பாலாஜி பிரபு.

Next Story