எத்தனை வருஷமானாலும் மாடர்னா இருக்குற நடிகர் அவருதானாம்… அப்போ ரஜினி இல்லையா?

rajni
தமிழ்த்திரை உலகைப் பொருத்தவரை எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்திற்குப் பிறகு இன்று வரை கோலூச்சிக் கொண்டு இருப்பவர்கள் கமல், ரஜனி இருவரும் என்றே சொல்லலாம். இந்த இருவருடனும் பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. இவர்களைப் பற்றி என்ன சொல்றாருன்னு பாருங்க.
ரஜினியைப் பொருத்தவரை அவர் எப்பவுமே தன்னைத் தாழ்த்திக்கிட்டு மற்றவர்களைப் பாராட்டுவார். எந்திரன் படத்துல ஒர்க் பண்ணும்போது எங்கிட்ட வந்து ரொம்ப கஷ்டப்படுறீங்கள்லன்னு கேட்டார். இல்ல. நீங்க படுற கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்வேன்.
நான் சும்மா ஜாலியாத் தானே உட்கார்ந்துட்டு இருக்கேன்னு ரஜினி அப்போது சொல்வார் என்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. அதே போல் சூட்டிங் இடையில் கேப் இருக்கும்போது தன்னைப் பக்கத்து உட்காரச் சொல்லி சேரை நகர்த்திப் போடுவாராம் ரஜினி. அதுமட்டுமல்லாமல் படம் வெளியானதும் என்னை போன்ல கூப்பிட்டுப் பாராட்டினார். சந்தோஷமோ, திட்டுறதோ உடனே சொல்லிடணும்னு சொன்னாராம் ரஜினி.
இந்தியன் 2 படத்துல கம்மியாத் தான் ஒர்க் பண்ணுனேன் என்கிறார் ரத்னவேலு. காரணம் இன்னொரு படத்துல அப்போ ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு விட்டுட்டு வர முடியாது. இந்தியன் கதர் துணியை விளம்பரப்படுத்த ஒரு மாடல் படம் எடுத்தோம். அப்போ கொடுக்கப்பட்ட டைம் இதுதான். அதுக்குள்ள பண்ணனும்னு கமல் சொன்னாராம்.
அவரை டைரக்ட் பண்ணும்போது 360 டிகிரி பார்த்துக்கணும். அவரே ஒரு ஜீனியஸ். முதல் ஷாட்லயே அவருக்கு என்னைப் பிடிச்சிடுச்சு. அதுல அவரு எனக்குக் கத்துக்கொடுத்தாரு. அதுதான் ஜீனியஸ். எத்தனை வருஷம் ஆனாலும் அவரு மாடர்னா இருக்காரு. இன்டர்னேஷனல் சினிமா லெவலுக்கு இருக்காரு. வரும் காலத்துல கமல் இயக்கத்துல பண்ணப்போற படத்துல ஒர்க் பண்ணுவேன் என்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.