ரஜினியின் 50 வருட வெற்றியின் ரகசியம் இதுதான்... அடடே இப்படியும் ஒண்ணு இருக்கா?

by sankaran v |   ( Updated:2025-03-20 21:15:40  )
rajni
X

#image_title

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த வெற்றி இன்னும் தொடர்கிறது. இதன் ரகசியம் என்னவென்று பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

1980ல.... ஒரே வருஷத்துல ரஜினிக்கு முரட்டுக்காளை, பொல்லாதவன், பில்லா படங்கள் வருது. எல்லாமே அதிரிபுதிரி வெற்றி. ஆரம்பத்துல கமல் நடிக்கிற பல படங்கள்ல ரஜினி வில்லனாவே நடிச்சாரு. இளமை ஊஞ்சலாடுகிறது படத்துல கடைசி வரை ரஜினி வில்லனாவே இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல யார்றா ஹீரோன்னா ரஜினி அந்த இடத்துக்கு வந்துடுவாரு. அதே மாதிரிதான் அவள் அப்படித்தான் படமும். சதுரங்கம் படத்துல ஸ்ரீகாந்த் ஹீரோ. ஆனா அதுல வில்லனா நடிச்ச ரஜினிக்குத் தான் பேரு.

நினைத்தாலே இனிக்கும் படத்துல ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்கிறாங்க. இந்தப் படத்தைப் பார்த்ததும் கமல் ரஜினி இனிமே நீங்க தனியா நடிங்க. நான் தனியா நடிக்கிறேன்னு சொல்லிட்டாராம். 80களுக்குப் பிறகு ரஜினியின் வெற்றியை இன்று வரை யாருமே தொட முடியாத அளவில் உள்ளது. பாட்ஷா படம் மெகா ஹிட் ஆனது. அரசியலுக்கு வர்றேன் வர்றேன்னு 25 வருஷமா ரசிகர்களைத் தக்க வச்சாரு.

அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வருவதைத் தவிர்த்தார். 50 ஆண்டுகாலம் ரஜினி சினிமாவில் தன்னைத் தக்க வைத்ததற்கு என்ன காரணம்? அது என்ன ரகசியம்னு பார்த்தால் ஆச்சரியம்.

murattukalai

murattukalai

அவரது படங்களை ரசிகர்களுடன் இணைந்து மாறுவேடத்தில் பார்ப்பாராம். அப்போது ரசிகர்களுக்கு எது பிடிக்கிறது? பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்வாராம். ரஜினிக்கு 2 கிட்னியை மாற்றி சிகிச்சை பண்ணினாலும் கூட இன்று வரை படங்களில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

ரஜினிக்குக் கதை முக்கியமா, இயக்கம் முக்கியமா என்பதை எல்லாம் தாண்டி ரசிகனின் கைதட்டல்தான் முக்கியம் என்ற எண்ணத்தில் படங்களில் நடிக்கிறார். சாதாரண ரசிகனாக இருந்துதான் ரஜினி இன்று வரை தியேட்டரில் படம் பார்க்கிறார்.

அதனால் அவர்களுக்குப் பிடித்தமாதிரி அவரால் படங்களில் நடிக்க முடிகிறது. இதுதான் ரஜினியோட 50 ஆண்டுகால வெற்றியின் ரகசியம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story