ஜனநாயகன் படத்துக்கு வந்த சிக்கல் உண்மையா? அடுத்த கட்ட நடவடிக்கையில் விஜய்!

by sankaran v |   ( Updated:2025-03-22 02:16:37  )
jananayagan
X

jananayagan

விஜய் இப்போது கடைசியாக நடித்துக் கொண்டு இருக்கும் படம் ஜனநாயகன். இந்தப் படத்துக்குப் பிறகு அரசியலில் முழுமுயற்சியாக இறங்கப் போகிறார். இதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் வேகமாக முடிவடைந்து விட்டதாம். இப்போது படத்துக்கு ஒரு சிக்கல் என்கிறார்கள். இதுகுறித்த அப்டேட்டை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டாங்க. ஏன்னா ஜூனியர் ஆர்டிஸ்டுக்கும், டெக்னீஷியனுக்குமான பேட்டாவையும், சம்பளத்தை நிறுத்திட்டாங்க. அந்த வகையில் இந்தப் படத்தின் அப்டேட்டைப் பற்றி விசாரித்த போது அப்படி எல்லாம் இல்லை. கேவிஎன் புரொடக்ஷன். விஜயோட கடைசி படம். அது எப்படி இருக்கும்? அந்தப் படத்துக்கு டேபிள் பிராஃபிட்னு ஒண்ணு இருக்கு. அதை வந்து வாங்கிக்கோங்கன்னு சொன்னாலே போதும்.

இந்தப் புரொடக்ஷன் செலவே சரியா போயிடும். ஜூனியர் ஆர்டிஸ்டுக்குப் போயி ஏன் பாக்கி வைக்கப் போறோம்? படம் கம்ப்ளீட்டா முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிட்டாங்களாம். படம் முழுக்க செட்டுக்குள்ளதான் எடுத்தாங்களாம். அவுட்டோர்ல எடுக்கவே இல்லையாம். அது மட்டுமல்ல படத்தை முடித்த கையோடு விஜய் மக்களை சந்திக்கிற சுற்றுப்பயணத்துக்கு ரெடியா ஆகிட்டு இருக்காராம்.

vijay tvk

vijay tvk

அதுக்காக வருகிற 28ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி அதுலதான் சுற்றுப்பயணம் பற்றிப் பேசப் போறாங்களாம். அதுக்கு எப்படி அனுமதி கிடைக்கும்? அதுக்கான பாதுகாப்பு, சுற்றுப்பயணம் ஆரம்பம் முதல் இறுதி வரை என்னென்ன ஷெடுல்? அப்படின்னு டிசைன் பண்ணப் போறாங்க. அதே நேரம் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷன் வேலையை வினோத் ஆரம்பித்து விட்டார் என்கிறார் செய்யாறு பாலு.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படம் ஜனநாயகன். கேவிஎன். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைத்துள்ளார். இது அரசியல் சார்ந்த த்ரில்லர் படம். விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, சுருதிஹாசன், மமிதா பைஜூ, வரலட்சுமி, ரெபா மோனிகா ஜான், தீஜே அருணாசலம் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதாலும், அரசியல்சார்ந்த படம் என்பதாலும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Next Story