ரசிகர்கள் தவறு செய்தால் அதற்கு விஜய் தான் முழு பொறுப்பு… என்ன காரணம் தெரியுமா?

by sankaran v |
vijay
X

vijay

Vijay: விஜய் தற்போது தனது கடைசி படமான ஜனநாயகனில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு முழு நேர அரசியல்வாதியாகிறார். இந்த நிலையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது கோவை ரோடு ஷோ பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த வகையில் இதுவரை ரசிகர்களின் நிலைப்பாடு என்னன்னு பார்க்கலாமா…

விஜயோட ரசிகர்கள் செய்ற செயல்களுக்கும் விஜயே தான் பொறுப்பு ஏற்கணும். பொதுவா ஒரு நடிகர் தன்னோட ரசிகர்கள் செய்ற செயலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய தேவையில்ல. ஆனா விஜயைப் பொருத்தவரைக்கும் எப்போ இவர் நடிகரா இருந்துக்கிட்டு எப்போ அரசியல்வாதியா மாறணும்னு முடிவு பண்ணினாரோ, எப்போ கட்சி தொடங்கி நம்ம முதல்வர் நாற்காலில உட்காரணும்னு முடிவு பண்ணினாரோ அன்னைக்கே தன்னோட ரசிகர்களை வேற பாதைக்குத் திருப்பி இருக்கணும்.

ரசிகனுக்கு பெரிய அறிவும் தேவையில்ல. கட் அவுட்டுக்குப் பால் ஊற்றணும். விசில் அடிக்கத் தெரியணும். தியேட்டர்ல படம் வரும் போது தோரணம் கட்டத் தெரியணும். ஸ்கிரீன் முன்னாடி 'ஜிங்கு ஜிங்கு'ன்னு டான்ஸ் ஆடணும். இதைத் தாண்டி அவனுக்கு வேற அறிவு தேவையில்லை. ஆனா அரசியல் கட்சியில தொண்டனுக்குக் கண்டிப்பா அரசியல் தெரியணும். உள்ளூர் பிரச்சனை முதல் உலகப் பிரச்சனை வரைக்கும் விரல் நுனியில வச்சிருக்கணும். அந்தளவுக்கு அவனுக்கு அறிவும், புரிதலும், பக்குவமும் தேவை. ஆனா விஜயின் ரசிகர்களுக்கு இதுல எதுவுமே இல்லை.

ஆனா அரசியல் தொடங்கும் முன்பே ரசிகர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுத்துருக்கணும். இன்னைக்கு ரோட்ல போகும்போது ஒருத்தன் மரத்துல இருந்து குரங்கு மாதிரி குதிக்கிறான். அவனுக்கு அரசியல் அறிவு இருந்தா இந்த சேட்டையை நிச்சயமா பண்ணி இருக்க மாட்டான். விஜயைப் பார்க்கும்போது ஒரு மனிதனா, சக மனிதனா, ஒரு அரசியல் கட்சியின் தலைவனா பார்க்குற பக்குவம் அவனுக்கு வந்துருக்கும்.

ஆனா இன்னைக்கு அப்படி வராம இன்னும் விசில் அடிக்கிறதுக்கு இவங்கதான் காரணம். அதனால் தானோ என்னவோ விஜய் ரோடு ஷோவில் 4 நிமிஷத்துக்குள்ள பேசி முடித்து விடுகிறார். இதற்கு முன்பு 1 மணி நேரம் வரை பேசிய அவருக்கு இந்த 4 நிமிட பேச்சு நிச்சயமா ஏமாற்றத்தைத் தான் தந்திருக்கும்.

மக்கள் பிரச்சனைக்கு மக்களோடு மக்களா நிக்கணும் என்ற உண்மையைப் புரிஞ்சிக்கிட்டு வந்து இன்னைக்கு நிக்கிறார். இது ஒரு நல்ல நகர்வாகத்தான் உள்ளது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Next Story