Cinema History
நீங்க இப்படி செய்யலாமா?!.. கடுப்பான சென்சார் போர்ட் அதிகாரி!.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நாகேஷ்…
தமிழ் திரையுலகில் 50.60களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தவர் நாகேஷ். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் அரசு பணியை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். துவக்கத்தில் பல அவமானங்களை சந்தித்து சினிமாவில் நுழைந்தவர். அழகான முகம் இல்லை, அதோடு ஒல்லியான தேகம், என சில குறைகள் இருந்தாலும் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தவர் இவர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர் உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக கலக்கியவர் நாகேஷ். ஒரேநாளில் 5 படங்களில் நடிக்குமளவுக்கு பிஸியாக இருந்தார். நாகேஷுக்காக எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் காத்திருந்த காலமும் இருந்தது. பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர். கொஞ்சம் வயதான பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாகவும் நடித்தார். கமலுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இதையும் படிங்க: படத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எனக்கு அதே பிரச்சனைதான் – ஓப்பனாக பேசிய ஹரிஷ் கல்யாண்..
சிவாஜி, தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்து 1963ம் வருடம் வெளியான திரைப்படம் அன்னை இல்லம். பி.மாதவன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் திக்குவாய் உள்ள கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருந்தார். படம் சென்சாருக்கு போனது. அப்போது சவுத்ரி எனும் சென்சார் அதிகாரி இருந்தார். அவர் இந்த படத்தை பார்த்துவிட்டு ‘படம் நன்றாக இருக்கிறது. ஆனால், நாகேஷ் நடித்துள்ள காமெடி காட்சிகளை மொத்தமாக வெட்டிவிடுங்கள்’ என சொன்னார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
நாகேஷை வர சொல்லுங்கள் நான் பார்க்க வேண்டும் என சாஸ்திரி சொல்ல நாகேஷ் அவரை பார்க்க சென்றார். அவரின் ‘நாகேஷ் நானும் உங்கள் ரசிகர்தான். ஆனால், கொஞ்சம் யோசித்து பாருங்கள். வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும். அவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது உங்கள் காமெடி. நீங்கள் இப்படியெல்லாம் நடிக்க கூடாது’ என அறிவுரை சொல்ல நாகேஷ் அவரின் காலில் விழுந்து ‘உண்மைதான். தெரியாமல் செய்துவிட்டேன். இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பேன்’ என சொன்னாராம். அதன்பின் நாகேஷ் நடித்த சில காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு சென்சார் சான்றிதழ் கொடுத்தாராம் அந்த அதிகாரி.
இதையும் படிங்க: சிவாஜி – எம்.எஸ்.வி இடையே வந்த சவால்!.. வந்ததோ ஒரு சூப்பர் மெலடி!.. அட அந்த பாட்டா?!..