Connect with us
chandrababu

Cinema News

படப்பிடிப்புக்கு வராம தூங்கிக்கொண்டிருந்த சந்திரபாபு!.. எம்.ஆர்.ராதாவும், பாலையாவும் கொடுத்த பதிலடி!..

எம்.ஜி.ஆர்.சிவாஜி காலத்தில் காமெடி நடிகர், ஹீரோ, பாடகர் என கலக்கியவர் சந்திரபாபு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என பலரின் படங்களிலும் இவர் நடித்துள்ளார். உடம்பை வளைத்து வளைத்து நடனமாடி ரசிகர்களை ரசிக்க வைத்தவர். இவர் பாடிய அனைத்து பாடலுமே சூப்பர் ஹிட்தான்.

ஆனால், சந்திரபாபுவின் சில நடவடிக்கைகள் அப்போது பலருக்கும் பிடிக்காமல் இருந்தது. யாரையும் மதிக்கமாட்டார். நான்தான் சிறந்த நடிகர் என எல்லோரிடமும் சொல்லுவார். தயாரிப்பாளர்களை மதிக்கமாட்டார். சரியாக படப்பிடிப்புக்கு வரமாட்டார் என அவர் மீது அப்போது பல குற்றச்சாட்டுகள் இருந்தது. ஆனாலும், திறமையான நடிகர் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

kavalai

kavalai

பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் ‘கவலை இல்லாத மனிதன்’ என்கிற படத்தை தயாரித்தார். அதில், சந்திரபாபு ஹீரோவாக நடித்தார். ஆனால், இந்த படம் முடியும் போது கண்ணதாசன் கவலை உள்ள மனிதனாக மாறியதுதான் மிச்சம். அந்த அளவுக்குஅவருக்கு மன உளைச்சலை சந்திரபாபு கொடுத்தார். படப்பிடிப்புக்கே செல்ல மாட்டார். அவரை வீடு தேடிப்போய் கண்ணதாசன் அழைப்பார். ‘இதே வந்துவிடுகிறேன்’ எனக்கூறிவிட்டு வேறு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிடுவார்.

அந்த படத்தில் எம்.ஆர்.ராதாவும், பாலையாவும் நடித்திருந்தனர். ஒருநாள் படப்பிடிப்பில் அவர்கள் இருவரும் காத்திருக்க சந்திரபாபு வரவில்லை. எனவே, அவரை அழைத்துவர கண்ணதாசன் சந்திரபாபுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சந்திரபாபு தூங்கிக்கொண்டிருந்தார். எனவே, அவர் எந்திரிக்கும் வரை காத்திருந்த கண்ணதாசன் அப்படியே சோபாவில் தூங்கிவிட்டார்.

chandrababu

chandrababu

அப்போது சந்திரபாபு எழுந்து ரெடியாகி கீழே வந்துள்ளார். தூங்கும் கண்ணதாசனை பார்த்துவிட்டு அவரை எழுப்பாமல் நேராக படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். ஆனால், காத்திருந்து காத்திருந்து கடுப்பான எம்.ஆர்.ராதாவும், பாலையாவும் அவருக்கு முன்பே வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டனர். எனவே, அன்று படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. இப்படி பல நாட்கள் பணம் நஷ்டமாகித்தான் அந்த படத்தை கண்ணதாசன் எடுத்து முடித்தார். அப்படத்தால் அவர் கடனாளியாகவும் ஆனது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top