Cinema History
சிவாஜியையே ஓவர்டேக் செய்த அசத்தலான நடிப்பு!.. அந்த படத்திலிருந்து டேக் ஆப் ஆன சந்திரபாபு!..
50களில் நாடகங்களில் பல வருடங்கள் நடித்து வந்த நடிகர்கள் மட்டுமே சினிமாவில் நுழைந்தார்கள். ஆனால், நாடகங்களில் நடிக்காமல் நேரிடையாக சினிமாவுக்கு வந்தவர் சந்திரபாபு. தனக்கு நன்றாக நடிக்க தெரியும், ஆட தெரியும், பாட தெரியும் என அவர் பலரிடமும் சென்று வாய்ப்பு கேட்டார்.
ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒருமுறை ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போது அங்கு நிர்வாகியாக ஜெமினி கணேசன் வேலை செய்து வந்தார். சந்திரபாபுவை ஜெமினி நிராகரித்தார். இதில் கோபமும், விரக்தியும் அடைந்த சந்திரபாபு அங்கே விஷம் குடித்தார். அதன்பின் அவரை மருத்துவமனையில் சேர்த்து ஜெமினி கணேசன் காப்பாற்றினார்.
இதையும் படிங்க: வாய்ப்பு கேட்டு போன சந்திரபாபு!. பங்கமாக கலாய்த்த எம்.ஜி.ஆர்!. அப்புறம் நடந்ததுதான் டிவிஸ்டு!..
பின்னாளில் அதே ஜெமினி கணேசனின் திரைப்படங்களில் சந்திரபாபு நடித்தார். தன்னை விட பெரிய நடிகன் சினிமாவில் இல்லை என்கிற ரேஞ்சில்தான் எப்போதும் சந்திரபாபு பேசுவார். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களையே நக்கலடிப்பார். சிவாஜியும், சந்திரபாபுவும் வாய்ப்புகள் கேட்டு பல சினிமா நிறுவனங்களுக்கு போயிருக்கிறார்கள்.
பின்னாளில் இணைந்தும் நடித்தார்கள். சந்திரபாபு கொஞ்சம் புகழடைந்ததும் சிவாஜியுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிகமாக கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என சொல்ல சிவாஜியும் அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டார். அதுதான் சந்திரபாபுவின் சுபாவம்.
இதையும் படிங்க: சிவாஜிகிட்டயே தனது வேலையை காட்டிய சந்திரபாபு… குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல…
சிவாஜியுடன் சந்திரபாபு இணைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சபாஷ் மீனா. பி.ஆர்.பந்துலு இயக்கி்ய இந்த திரைப்படம் 1958ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் தனது நடிப்பால் சிவாஜியை சந்திரபாபு ஓரங்கட்டினார். மெட்ராஸ் பாசையை அழகாக பேசி கைத்தட்டலை அள்ளினார். மேலும், ஆள்மாறாட்டத்தில் விழிபிதுங்கி முழிப்பது போல் நடித்த அவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.
சபாஷ் மீனா திரைப்படம்தான் சந்திரபாபுவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓ மை டார்லிங்!.. எம்.ஜி.ஆரை கலாய்த்த சந்திரபாபு!.. ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது!..