More
Categories: Cinema History Cinema News latest news

இவர பாட சொன்னா படிக்கிறாரு… எம்.எஸ்.வியின் மெட்டையே குறை சொன்ன சந்திரபாபு…

கோலிவுட்டின் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெட்டு போடவே தெரியவில்லை என சந்திரபாபு விமர்சனம் செய்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

60களில் பல துறைகளில் வித்தகராக இருந்தவர் சந்திரபாபு. இவர் பல போராட்டத்திற்கு பின்னரே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு முறை வாய்ப்பு தேடி சுப்பையா நாயுடுவிடம் சென்றாராம். அங்கு அவருக்கு உதவியாக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவரிடம், சந்திரபாபுவிற்கு வாய்ஸ் டெஸ்ட் எடுக்க கூறிவிட்டு கிளம்பினாராம். அவரும் தனக்கு தெரிந்த பாடல்களை எல்லாம் பாடி காட்டினாராம்.

Advertising
Advertising

இந்த சமயத்தில் அங்கு வந்த நாயுடு என்னப்பா டெஸ்ட் முடிந்ததா? எப்படி பாடுகிறார் எனக் கேட்டாராம். இதற்கு எம்.எஸ்.வி எங்கு பாடிகிறார்? படிக்க தானே செய்கிறார் எனக் கூறிவிட்டாராம். வாய்ப்பு நிராகரிக்கப்பட்டு வெளியேறிவிட்டார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் – சந்திரபாபு சண்டை… உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

தொடர்ந்து, இருவரும் அவர்கள் துறையில் சாதித்து நல்ல நிலைமையில் இருக்கும் போது மீண்டும் இணையும் சந்தர்ப்பம் கிடைத்ததாம். அங்கு வைத்திருக்கிறார் சந்திரபாபு ட்விஸ்ட். எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான குலேபகாவலி படம். இப்படத்தில் சந்திரபாபு ஒரு முக்கிய வேடம் ஏற்று இருந்தார். அவருக்கு அப்படத்தில் ஒரு பாடலை அமைக்க இயக்குனர் ராமண்ணா விரும்பி இருக்கிறார். அதை இசையமைக்க இரட்டை இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கேட்டுக் கொண்டார். அவர்களும் மெட்டை போட்டு வைத்தனர்.

அதை கேட்க ஸ்டூடியோ வந்த சந்திரபாபு, இசையை கேட்டுவிட்டு இதற்கு தன்னால் எப்படி ஆட முடியும்? இதெல்லாம் ஒரு பாட்டா? என கடுப்படித்து இருக்கிறார். இது சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆனால், எம்.எஸ்.வி இது தனக்கு அவர் செய்யும் பழிக்கு பழி என புரிந்து கொண்டாராம். ஆனால் கோபம் எல்லாம் படவில்லை. உடனே எழுந்து சென்று அந்த இசையை இசைக்க செய்து விட்டு வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு ஆடினாராம். இதை பார்த்த சந்திரபாபுவிற்கே ஆச்சரியம் தான். உடனே ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டார். அன்றில் இருந்து இருவரும் இணை பிரியாத நண்பர்களாக மாறினார்களாம்.

Published by
Akhilan