என்னை ஏத்துக்கோ பாபு!... கெஞ்சிய மனைவி.. மனம் இறங்காத சந்திரபாபு!... திருமண வாழ்வில் நடந்த திருப்பம்..

by Akhilan |
என்னை ஏத்துக்கோ பாபு!... கெஞ்சிய மனைவி.. மனம் இறங்காத சந்திரபாபு!... திருமண வாழ்வில் நடந்த திருப்பம்..
X

Chandrababu: சந்திரபாபு திருமண வாழ்க்கை குறித்த சர்ச்சை இன்னமும் கோலிவுட்டில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது. சிலர் அவர் மனைவியை விட்டுக்கொடுத்தார் என்றும் சிலர் அவர் கொடுமைப்படுத்தினார் எனவும் பல கருத்துக்களை சொல்லி வருகின்றனர். இதுகுறித்த உண்மையை அவருடன் இருந்தவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் பேட்டியில் இருந்து, சந்திரபாபு அண்ணன் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. வீட்டுக்கு வந்த பெண் பெரிதாக யாருடனும் பேசமாட்டார். அப்போ அப்போ அழுவார். எங்க அம்மா சந்திரபாபுவை கூப்பிட்டு சொன்ன போது அவர் தான் பார்த்து கொள்வதாக கூறினார். அந்த பெண்ணிடம் கேட்டார்.

இதையும் படிங்க: இந்த டைம்ல மட்டும் விஜய்கிட்ட பேசவே முடியாது! இருந்தாலும் தளபதி ரொம்ப சூடாதான் இருப்பார் போல

இவர்களுக்கு இங்கிலிஷ் பேச தெரியவில்லை. அதனால் வெளியில் சென்று என் நண்பர்களை பார்த்து வருகிறேன் என்றார். ஒருமுறை சந்திரபாபு வெளியில் போனதும் அவர் மனைவி ஷீலா வெளியில் போனவர் வீட்டுக்கு வரவில்லை. மணி 2 வரை அவர் வரவே இல்லை. பாபு சரக்குடன் ஷோபாவில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போ தான் தெரிந்தது. அவர் தன்னுடைய காதலுடன் செல்வதாக கடிதம் எழுதிவிட்டு சென்று இருக்கிறார். பின்ன ஏன் வீட்டுக்கு வந்த எனக் கேட்கும் போது என் காதலன் காசில்லாமல் வரக்கூடாது என்று கூறிவிட்டான். என்னை மன்னித்துவிடு. இனி எங்கையும் போக மாட்டேன் பாபு என்றாராம்.

ஆனால் சந்திரபாபு அதுக்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். நீ என்னை ஏமாத்திவிட்ட நீ எனக்கு வேணாம். என்னிடம் இருப்பதை எடுத்துக்கோ என்னிடம் இருந்து போய்விடு என்றாராம். சிவாஜி, பாபுவின் குரு ஆகியோரை அழைத்து இந்த விஷயத்தை பேசி முடித்தார்களாம்.

இதையும் படிங்க: விஜயகாந்தை இவ்வளவு நாள் காப்பாத்துனதே இதுதான்! ஓ இதுக்குத்தான் யாரையும் பாக்க விடலயா?

வேறு ஒரு டாக்டரை அவர் பெற்றோர் திருமணம் செய்து வைக்க இப்போ பேரன், பேத்தி எடுத்து வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இது தான் சந்திரபாபு வாழ்க்கையில் நடந்தது. அவர் யாரையும் கஷ்டமே படுத்தவே இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story