பணத்தில் கறார் காட்டிய ஜெமினி கணேசன்… ஜெயலலிதாவால் கடுப்பான எம்ஜிஆர்…

by Akhilan |   ( Updated:2024-04-03 06:20:22  )
பணத்தில் கறார் காட்டிய ஜெமினி கணேசன்… ஜெயலலிதாவால் கடுப்பான எம்ஜிஆர்…
X

Chandrababu: நடிகர் சந்திரபாபு கோலிவுட்டின் உச்சத்தில் இருந்தவர். திடீரென சறுக்கினார். அவரை சுற்றி இல்லாத பரபரப்புகளே இல்லை. எம்.ஜி.ஆருடன் சண்டை, ஜெமினி கணேசனுடன் தகராறு இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் காரணம் குறித்து அவரின் சகோதரர் ஜவகர் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, சந்திரபாபுவின் வீடு ஏலத்துக்கு வந்த போது எம்.ஜி.ஆர் உதவி செய்ததாக கூறப்படுவது உண்மை இல்லை. கணபதி முதலியார் அண்ணன் வாங்கிய இரண்டு லட்சம் கடனுக்கு நான்கு லட்சம் எனக் கூறிவிட்டார். நாங்கள் அந்த இடத்தினை மீண்டும் வாங்க போராடினோம். கிரஸ்ண்ட் மூவிஸ் மட்டுமல்ல அப்போலோ நிறுவனம் கூட அதை வாங்க முன்வந்தார்கள்.

இதையும் படிங்க: ரஜினியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் அந்த படமா? ஓ அதான் அப்படி செஞ்சாரா?

ஆனால் கணபதி முதலியார் அவர்கள் வீட்டு குடும்ப தகராறை காரணம் காட்டி அதை எங்களிடம் தராமல் ஏமாற்றிவிட்டனர். சந்திரபாபுவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அவருக்கு பாபுவும், ஜெயலலிதாவும் பேசுவது பிடிக்காது. ஆனால் அந்த அம்மாவுக்கு பாபுவை ரொம்ப பிடிக்கும்.

அடிக்கடி அழைத்து மனசு விட்டு பேசி இருப்பார். இதனால் எம்.ஜி.ஆர் கோபமாக இருந்தார். ஒருமுறை சந்திரபாபு ஒருபேட்டியில் குடித்துவிட்டு தான் சில விஷயங்களை பேசியதாக கூறுகின்றனர். ஆமாம் உண்மை தான். அந்த பேட்டியை அவர் குடித்துவிட்டு தான் கொடுத்தார். ஆனால் போதையில் சொன்னது இல்லை.

அதில் சொன்னதும் எல்லாமே உண்மை தான். ஜெமினி கணேசன் மனிதர்களை பார்த்து பழக மாட்டார். அவருக்கு காசு தான். அதை கொடுத்தால் நடிக்க வருவார். இல்லை அவரை பிடிக்கவே முடியாது. அதே, ஜெமினி கணேசன் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டும் இருந்தார். அதை நானே கண்ணில் பார்த்து இருக்கேன்.

இதையும் படிங்க: அங்க ரஜினி படம் ஒடவே ஒடாது! இழந்த மார்கெட்டை அந்த ஒரு படத்தின் மூலம் மீட்ட சூப்பர்ஸ்டார்

கண்ட இடத்தில் சுத்துறாரேனு. வீட்டிற்குள் அடைத்து வந்து இருந்தார் கமலா அம்மா. என்னிடம் குடிக்க வேண்டும். சிக்கன் வேண்டும் என்றார். அதை கமலா அம்மாவுக்கு தெரியாமல் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன். அவன் வட்டி வியாபாரத்துக்கு தான் லாயக்கு. எம்.ஆர்.ராதா தான் சிறந்த நடிகர் என்பதே சந்திரபாபு எண்ணம் என்றார்.

Next Story