தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கும் சந்திரமுகியின் இரண்டாம் பாகத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களும் விமர்சிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் கதை, காமெடி, பாடல்கள் என பலவகையில் பாசிட்டிவ் விமர்சனத்தினையே பெற்றது. அதிலும் வடிவேலுவின் காமெடி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க : சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கும் லைக்கா!.. விஜய் மகன் இயக்குனர் ஆனதன் பின்னணி!..
ஜோதிகாவின் நடிப்பு சந்திரமுகியில் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. தேசிய விருது வரை போய் டப்பிங்கால் அந்த விருதினை ஜோதிகா மிஸ் செய்த சம்பவங்களும் நடந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது.
பி.வாசு இயக்கி வரும் இப்படத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்க சந்திரமுகி வேடத்தினை ஏற்று இருக்கிறார் கங்கனா ரணாவத். இப்படத்தில் வடிவேலு நடிக்க ஆஸ்கார் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைப்பு செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: உலகமே கொண்டாடிய சம்பவம்! மௌனம் காத்த விஜய் – அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா?…
வேட்டையன் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடைபெற்றது. கீரவாணியின் இசைக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு இப்படத்திற்கு விமர்சனமாக மாறும் என்ற சந்தேகம் நிலவுகிறது.
ஆறுதலாக இப்படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார். பல வருடத்துக்கு பின்னர் சினிமாவிற்கு திரும்பி இருக்கும் வடிவேலு நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. அதை போல இப்படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…