Categories: Cinema News latest news trailers

வேட்டையனின் மரணமாஸ் ரீ எண்ட்ரி!.. சிலிர்க்க வைக்கும் ‘சந்திரமுகி 2’ டிரெய்லர் வீடியோ…

மலையாளத்தில் ஹிட் அடித்த மணிச்சித்திரத்தாள் படத்தை உல்டா செய்து கன்னடத்தில் ஆப்தமித்ரா என்கிற படத்தை எடுத்தார் பி.வாசு. அதன்பின் அதையே தமிழில் ரஜினியை வைத்து இயக்கினர். அதுதான் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் என பலரும் நடித்து 2005ம் வருடம் வெளியான திரைப்படம் சந்திரமுகி.

இப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த வேட்டையன் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு வெகுவாக கவர்ந்தது. இந்த வேடத்தில் ரஜினி அசால்ட் பண்னியிருப்பார். அதேபோல், இப்படத்தின் வடிவேலுவின் காமெடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். பல வருடங்கள் கழித்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: வேறலெவல் வெறித்தனம்!.. ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர்!. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ டிரெய்லர் வீடியோ…

இதில், ராகவரா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும், சந்திரமுகியாக கங்கனா ரணாவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், வடிவேலு, சிருஷ்டி டாங்கே, ராதிகா என பலரும் நடித்துள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தின் வேட்டய மன்னன் யார்?.. சந்திரமுகி யார்?.. அவர்களின் பின்புலம் என்பதை பி.வாசு திரைக்கதையாக அமைத்துள்ளார். இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Published by
சிவா