சந்திரமுகியா நடிக்க லிஸ்ட்ல இருந்தவங்க இத்தனை பேரா? ஜோதிகா என்டர் ஆனது எப்படி?

chandramukhi
பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, சௌந்தர்யா மற்றும் வடிவேலு உள்பட பலர் நடித்துள்ள சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி. இந்தப் படம் 800 நாள்களுக்கு மேல் ஓடி புதிய சாதனை படைத்தது. படத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. சந்திமுகியாக வரும் காட்சிகளில் மிரட்டி இருப்பார்.
இப்போது அந்தக் காட்சிகளைப் பார்த்தாலும் நமக்கு கூஸ்பம்ஸாகவே இருக்கும். இதன் 2ம் பாகம் வந்தது. ஆனால் அது ரசிகர்களை அவ்வளவாகக் கவரவில்லை. முதல் பாகத்தில் ஜோதிகா கேரக்டரில் நடிப்பதற்காக பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலீக்கப்பட்டது. ஆனால் கடைசியாக தேர்வானவர் தான் ஜோதிகா. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

சந்திரமுகி படத்துல ஜோதிகா கதாபாத்திரத்துல முதல்ல நடிச்சவங்க சௌந்தர்யா இல்ல. சிம்ரன் தான் முதல்ல ஜோதிகா கதாபாத்திரத்துல நடிச்சாங்க. சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. அப்போது அவங்க கர்ப்பமாக இருந்ததால தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து அந்தக் கதாபாத்திரத்துல ஐஸ்வர்யா ராயைக் கேட்டாங்க. அவங்களால தேதிகளை ஒதுக்க முடியல.
அதனால சதா, ரீமாசென்னையும் நடிக்க வைக்க பரிசீலித்தார்கள். இறுதியாக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது தான் ஜோதிகா. அவர் மிகச்சிறப்பாக அந்தப் படத்தில் நடித்து இருப்பார். அவங்க அந்தக் கதாபாத்திரத்துல நடித்தது இன்று வரை பேசப்பட்டு வரக்காரணம் அவரது மிகச்சிறந்த நடிப்புதான் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2005ல் வெளியான இந்தப் படத்துக்கு வித்தியாசாகர் இசை அமைத்துள்ளார். இது ஒரு திகில் படம். அதே நேரம் காமெடி, சென்டிமென்ட் கலந்த மசாலாவாக வாசு கொடுத்திருந்தார். படத்தில் தேவுடா தேவுடா, கொக்கு பற பற, அத்திந்தோம், கொஞ்ச நேரம், ரா ரா சரசகு ரா ரா, அண்ணனோட பாட்டு என அனைத்துப் பாடல்களும் செம.