Categories: Cinema News latest news

ரீலு அந்து போச்சி!.. பல்பு வாங்கின சந்திரமுகி2… எதுக்கு இந்த வேண்டாத வேலை?!

Chandramukhi Movie: ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகராய் மட்டுமல்லாமல் நடன ஆசிரியராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ரஜினிகாந்தின் மிகபெரிய சிஷ்யனும் கூட. எந்தவொரு மேடையில் ஏறினாலும் ரஜினியை பற்றியும் தனது தாயாரை பற்றியும் பேசாமல் மட்டும் இருக்க மாட்டார்.

இவர் நடிப்பில் மற்றும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் சந்திரமுகி2. இப்படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா போன்ற பல முன்னணி பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் வாசிங்க:எப்பவும் கஞ்சா சிகரெட்டு கத்தி துப்பாக்கி!.. லோகேஷ் பக்கம் ரூட்டை திருப்பிய புளூசட்டமாறன்…

இத்திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு நடித்திருந்தனர். இப்படத்தில் வடிவேலுவின் காமெடிகள் படத்தினை பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் விதமாக இருந்தது. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் பெற்று தந்தது. வடிவேலுவின் காமெடிகளே இப்படத்திற்கு பெரிய பலமாகவும் இருந்தது.

ஆனால் முதல் பாகத்தில் இருந்த அளவு வடிவேலுவின் காமெடிகள் இரண்டாம் பாகத்தில் இல்லை என ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் உலாவின. மேலும் முதல் படத்தை அப்படியே எடுத்து வைத்துள்ளனர் எனவும் கலாய்த்து தள்ளினர். இப்படமானது ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மையும் கூட.

இதையும் வாசிங்க:அஜித்தை பற்றி த்ரிஷா சொன்ன ஷாக்கான நியூஸ்! – களைகட்டப் போகும் ‘விடாமுயற்சி’

தமிழில்தான் இப்படம் சரியாக ஓடவில்லை என பார்த்தால் ஹிந்தியிலும் இப்படம் தோல்வியையே சந்தித்துள்ளது. இதற்கு இப்படத்தின் ஹிந்தி வெர்ஷனில் பேசப்பட்ட வார்த்தைகள்தான் காரணமாக அமைந்ததாம். ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட இப்படத்தினை பார்த்த பார்வையாளர்கள் படத்தின் பாதியிலேயே எழுந்துவரும்படி ஆகிவிட்டதாம்.

இப்படத்தின் காமெடி காட்சிகளில் நடித்த வடிவேலுவின் வசனங்களை டப்பிங் செய்யுபோது பல மோசமான வார்த்தைகளால் டப்பிங் செய்ததாகவும் மேலும் அவ்வார்த்தைகளை காதினால் கேட்க கூட முடியாதவாறு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழிலேயே யாரும் ரசிக்காத நிலையில் தற்போது பாலிவுட்டிலும் சென்று தோல்வியை சந்தித்துள்ளது சந்திரமுகி2.

இதையும் வாசிங்க:காசு மேலே காசு வந்தா யாருக்குத்தான் ஆசை வராது!.. எஸ்.ஜே.சூர்யாவின் மனதை மாற்றிய மார்க் ஆண்டனி!..

Published by
amutha raja