Connect with us
chandrababu

Cinema History

தற்கொலை ஒன்றே சரி.. சந்திரபாபுவும் அவரின் மனைவியும் எடுத்த முடிவு!.. காப்பாற்றிய இயக்குனர்…

Chndrababu: 50,60களில் தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்திரபாபு. நிலைத்து நிற்கும் பல பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் அவரின் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை சோகமே நிரம்பி இருந்தது.

ஷீலா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சந்திரபாபு. முதல் இரவின் போது நம்மிடம் எந்த ஒளிமறைவும் இருக்கக்கூடாது என சொன்ன சந்திரபாபு திருமணத்துக்கு பின் அவருக்கு சில பெண்களுடன் இருந்த உறவு பற்றி சொல்லிவிட்டார். இவர் சொல்லும்போது நாமும் சொல்வோம் என நினைத்த ஷீலா திருமணத்திற்கு முன் 2 பேருடன் இருந்த உறவு பற்றி அவரிடம் சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?

இதைக்கேட்டு பொங்கி வெடித்தார் சந்திரபாபு. அதோடு, அறைக்கு வெளியே ஷீலாவை தள்ளிவிட்டு கதவை சாத்திகொண்டார். ஷீலா எவ்வளவு கெஞ்சியும் அவர் மனம் இறங்கவில்லை. இதனால் தற்கொலை ஒன்றே சரியான முடிவு என நினைத்தார் ஷீலா. ஆனால், சந்திரபாபு பெரிதும் மதிக்கும் இயக்குனர் கே.சுப்பிரமணியத்திடம் சொல்லிவிடலாம் என நினைத்து தொலைப்பேசி மூலம் அவருக்கு தகவல் கொடுத்தார்.

chandrababu

பதறிப்போன சுப்பிரமணியின் சந்திரபாபுவின் வீட்டிற்கு வந்து சந்திரபாபுவை சமாதானம் செய்ய முயன்றார். ‘உனக்கொரு நியாயம். அவளுக்கொரு நியாயமா. உன்னை போல அவளும் உண்மையை சொன்னாள். அதை புரிந்துகொண்டு வாழக்கையை வாழப்பார்’ என எவ்வளவோ அறிவுரைகளை சொன்னார். ஆனால், ‘நான் மீண்டும் ஷீலாவுடன் வாழ நீங்க்கள் ஆசைப்பட்டால் நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என சந்திரபாபு சொல்ல இனிமேல் இவர்களை இணைக்க முடியாது என நினைத்த சுப்பிரமணி ஷீலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று சில நாட்கள் தங்கவைத்தார்.

அதோடு ‘நீங்கள் பிரிந்து வாழ்வதுதான் சரி’ என சொல்லி ஷீலாவை அவரின் சொந்த நாட்டிற்கும் அனுப்பி வைத்தார். திருமண வாழ்க்கை இப்படி முடிந்ததால் விரக்தியடைந்த சந்திரபாபு மதுப்பழக்கத்திற்கும் ஆளாகி உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு ஒரு கட்டத்தில் உயிரையும் விட்டார் என்பதுதான் சோகம்.

இதையும் படிங்க: நடிகரை சரக்கடிக்க வச்சி மாட்டிவிட்ட சந்திரபாபு!.. கடுப்பான எம்ஜிஆர்.. படப்பிடிப்பில் நடந்த களேபரம்..

google news
Continue Reading

More in Cinema History

To Top