கிட்டத்தட்ட 15 மணி நேரம் நிக்கணும்! ‘குக் வித் கோமாளி’ தாமுவுக்கு இப்படி ஒரு பிரச்சினையா?

Chef Dhamu: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. மக்களை கவர்வதற்காக விஜய் தொலைக்காட்சி ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. அதில் மிகவும் பிரபலம் வாய்ந்த நிகழ்ச்சியாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி திகழ்கிறது. மூன்று சீசன்களை கடந்து இப்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை வெங்கட் பட் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நிலையில் இப்போது நான்காவது சீசனில் வெங்கட் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்திருக்கிறார். இந்த நிலையில் செப் தாமு அவருடைய உடலில் இருக்கும் பிரச்சனையை தற்போது ஒரு பேட்டியின்போது கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்யாவின் அடுத்த படத்துக்கு ஆஸ்கார் பட பிரபலமா?… விட்டத பிடிக்க செம ப்ளானா இருக்கே…

அதாவது இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் வந்ததிலிருந்தே நாள்தோறும் 15 மணி நேரம் நிற்க வேண்டியது இருப்பதால் மூட்டு வலியே வந்துவிட்டதாகவும் 18 மணி நேர வேலையில் 15 மணி நேரம் முழுவதுமாக நிற்பதாக கூறியிருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் குக் வித் கோமாளி ஷூட்டிங்கின் போது ஒரு சமயம் விழுந்து விட்டாராம். அதிலிருந்து அவரால் அதிக நேரம் நிற்க முடியாத சூழ்நிலையாம். அதனால் கொஞ்ச நேரம் உட்கார்ந்தும் கொஞ்ச நேரம் நிற்பதுமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக சமீபத்திய ஒரு பேட்டியில் தாமு கூறி இருக்கிறார்.

இதை போலத்தான் ஏற்கனவே தொகுப்பாளினி டிடி தொடர்ந்து எல்லா நிகழ்ச்சிகளையும் நின்று கொண்டே தொகுத்து வழங்கியதால்தான் அவரின் காலில் கூட ஏதோ பிரச்சினை ஏற்பட்டு அதிலிருந்தே விஜய் டிவியில் இருந்து விலகினார்.

மேலும் உட்கார்ந்து பண்ணுகிற மாதிரி ஏதாவது ஷோ இருந்தால் அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகிறேன் என்று சொல்லியும் விஜய் டிவி நிறுவனம் அவரை நிராகரித்துவிட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: மல்கோவா மாம்பழம் கணக்கா கும்முன்னு இருக்க!.. அரைஜாக்கெட்டில் அழகை காட்டும் ஜான்வி கபூர்…

 

Related Articles

Next Story