ரூ.100 கோடி பட்ஜெட்டில் வில்லன் நடிகரை இயக்குனர் சேரன்!.. கேட்டா தலையே சுத்துது...

கன்னட நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். கன்னடத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். கன்னடத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் இவர். கன்னட படம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னாளில் ஹீரோவாக மாறினார்.

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் நானி ஹீரோவாக நடித்த ‘ஈ’ படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் மூலம்தான் இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அதேபோல், பாகுபலி படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இவரின் பல கன்னட படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கிக் விமர்சனம்: கிக்குக்கு பதில் கிறுக்குன்னு வச்சிருக்கலாம்.. சந்தானம் இப்படி பிளேடு போட்டு சாகடிக்கலாமா?

தமிழ் பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்திலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த சுதீப் இப்போது சில தமிழ் படங்களில் நடிக்கவுள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தின் டைட்டில் வீடியோ நாளை வெளியாகவுள்ளது.

மேலும், சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் கிச்சா சுதீப் நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இதில், ஆச்சர்யம் என்னவெனில் இப்படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார். சேரன் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற ஃபீல் குட் திரைப்படங்களை இயக்கியவர்.

இதையும் படிங்க: கடைசியா நெல்சனுக்கு காரும் வந்துடுச்சு!.. கலாநிதி மாறன் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மென்ட் வீடியோ இதோ!..

அவர் எப்படி கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்குவார்?... அதிலும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு கதையைத்தான் சொல்லி அசத்தியுள்ளார் சேரன். அதோடு, தன்னுடைய வழக்கமான ஸ்டைலாக இல்லாமல் ஒரு கமர்ஷியல் படமாக இப்படத்தை எடுக்கவுள்ளாராம். இந்த படத்தின் அறிவிப்பும் நாளை (செப்.2) வெளியாகவுள்ளது.

இயக்குனர் சேரன் கடைசியாக இயக்கிய திரைப்படம் திருமணம். இந்த படமும் ஒடவில்லை. தவமாய் தவமிருந்து படத்திற்கு பின் ஹிட் படத்தை சேரன் கொடுக்கவில்லை. மேலும், நடிகராக மாறி பல திரைப்படங்களிலும் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், விஜய் சேதுபதிக்காக பல வருடங்களும் காத்திருந்தார். இந்த நிலையில்தான் கிச்சா சுதீப்பின் படத்தை அவர் இயக்குவது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: டேய் அதுல அவர் மாஸ்டர்டா!. துபாயில் அஜித்துக்கு வச்ச டெஸ்ட்.. சக்சஸ் பண்ணி நண்பர்களுக்கு வைச்ச பார்ட்டி!..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it