செம வெறியில் இருக்காரே! பேன் இந்தியா படத்துக்கு ரெடியான சேரன் - இளம் இயக்குனர்கள் மீது இவ்ளோ கோபமா?
Director Cheran: பொதுவாக குடும்பங்கள் கொண்டாடும் ஒரு இயக்குனராக இருந்தவர் இயக்குனர் சேரன். உதவி இயக்குனராக 10 படங்களுக்கு மேல் பணியாற்றி அதன் பிறகே இயக்குனராக மாறியவர். வாழ்வியல் எதார்த்தத்தை மிகவும் அழகாக காட்டக் கூடியவர் சேரன். இவரின் பெரும்பாலான படங்கள் எதாவது ஒரு வகையில் நம் சொந்த வாழ்க்கையை ஒட்டியே அமைந்திருக்கும்.
குடும்பம் குடும்பமாக பார்க்கக் கூடிய பல வெற்றிப் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார் சேரன். பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா இவர்கள் வகுத்த பாதையில் பயணிக்கத் தொடங்கினார். இவர் மட்டுமில்லாமல் இவருடன் சேர்ந்து பாலா, அமீர், சீமான் என ஒரு கூட்டமே ஒன்றாக பயணித்தனர்.
இதையும் படிங்க: கொள்ளிக் கட்டையை எடுத்து தலைய சொறிஞ்ச கதையா போச்சு! சொல்லவும் மெல்லவும் முடியாம தவிக்கும் மக்கள் செல்வன்
ஆனால் சினிமாவின் புதிய பரிணாமம், மக்களின் பார்வை கொஞ்சம் மாறத் தொடங்கியதால் புது புது இயக்குனர்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள். அதனால் இவர்களை போன்ற இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
சேரன் போன்ற இயக்குனர்களின் அந்த குடும்ப பாங்கான படங்களை பார்த்தே நீண்ட நாள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் துப்பாக்கி, வன்முறை, போதைப் பழக்கம் என தீய செயல்களுக்கு வழி வகுக்கும் படங்களாக ஒரு சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை பற்றி உங்களுடைய பார்வை என்ன என சேரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
இதையும் படிங்க: இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்குறாரு! ‘பிக்பாஸில்’ கமல் பண்ண வேலைக்கு பதிலடி கொடுத்த நிர்வாகம்
அந்த மாதிரி படங்கள் தானே 500 கோடி , 1000 கோடி என்று வசூல் ஆகின்றது. அதற்கு காரணம் என்ன? மக்கள் விரும்பி போய் பார்ப்பதால் தான் அந்தளவுக்கு வசூல் ஆகின்றது. மக்கள் பார்க்க பார்க்க அந்த மாதிரி படங்களைத்தான் இவர்களும் எடுப்பார்கள். மேலும் சமூகத்திலும் பல அப்டேட்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்றாற்போல நாமும் அப்டேட் ஆகி வர வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறோம் என்று கூறினார்.
உங்களுக்கும் அந்த மாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா என்று கேட்ட போது கண்டிப்பாக பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என கூறினார். இதை பற்றி மேலும் கூறிய சேரன் ‘புதிய இயக்குனர்கள் வந்ததால் எங்களை மறந்து விட்டார்கள். பத்திரிக்கையில் எழுதும் போது கூட பாலசந்தர், பாலுமகேந்திரா இவர்களை இயக்குனர்களின் பட்டியலில் சேர்ப்பதே இல்லை. அதன் பிறகு வந்த எங்களையும் விட்டு விட்டார்கள்.
இதையும் படிங்க: புருஷன் கெட்டினு நினைச்சா பக்கா மோசடியா இருக்காரே!.. புலம்பி தள்ளும் சீரியல் நடிகை மகாலட்சுமி!
இதுதான் இட ஒதுக்கீடு. எங்களுக்கான இடம் எங்கே? அதுதான் எனக்கு கொஞ்சம் கோபத்தை அதிகரிக்க வைக்கிறது. அதனால் நாமும் இறங்குவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்’ என்று மறைமுகமாக ஒரு ஹிண்டை கொடுத்தார் சேரன். அவரின் அடுத்தப் படம் பக்கா கமெர்சியல் படமாக இருக்கும் என்று அவர் சொல்வதிலிருந்து யூகிக்க முடிகின்றது.