Connect with us
cheranpandiraj

Cinema History

பாண்டிராஜை போட்டுக்கொடுத்த நடிகை..! படப்பிடிப்பில் அசிங்கமாக திட்டிய சேரன்…!

PandiRaj: தமிழ் சினிமாவின் சின்ன பட்ஜெட் படங்களில் படம் எடுத்தே தனக்கென ஒரு இடத்தினை பிடித்த இயக்குனர் பாண்டிராஜ் தான். அவர் தன்னுடைய சினிமா கேரியரில் சந்தித்த மிகப்பெரிய அவமானம் என ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வறுமையின் காரணமாக சினிமா ஆசையை வளத்து கொண்டவர் பாண்டிராஜ். இவரின் தாய் கதைகளை அழகாக கூறுவதில் கெட்டியாம். அதை கேட்டு இவருக்குமே அந்த ஆசை வந்து இருக்கிறார். கதை படமாக இயக்கும் ஆசையில் சென்னை வந்து இறங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: நானும் எப்பதான் விஜய் மாறி ஆவுறது? சொந்தமாவே சூனியம் வைக்க தயாரான சிவகார்த்திகேயன் – அடக்கடவுளே

முதலில் இயக்குநர் பாக்யராஜின் ஆஃபீஸில் வேலை செய்து வந்து இருக்கிறார். அதை தொடர்ந்து இயக்குனர் சேரனிடம் அவர் இயக்கிய பாண்டவர் பூமி படத்தில் இருந்து உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார். சேரன் சம்பளம் கொடுக்க மாட்டார் என்றாலும் சினிமா அனுபவத்தினை வளர்த்து கொள்ளும் ஆர்வத்தில் சென்று இருக்கிறார்.

சேரன் பார்ப்பதற்கு தான் அமைதியான ஆள். ஆனால் அவருக்கு கோபம் வந்துவிட்டால் சுற்றி இருப்பவர்களை கடுமையாக விமர்சிப்பார். ஆட்டோகிராப் படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டு இருந்தது. பாண்டிராஜை சேரன் கடுமையாக திட்டிவிட்டார்.

அந்த கோபத்தில் இருந்தவர் படப்பிடிப்பில் இருந்த ஒருவரை கண்டமேனிக்கு டோஸ் விட்டு இருக்கிறார். ஆனால் அவர் நடிகை சினேகாவின் மேக்கப் மேனாம். அவர் ஒன்னுக்கு இரண்டாக சினேகாவிடம் வத்தி வைக்க அம்மணி கோபமாகி விட்டாராம்.

இதையும் படிங்க: விஜய் டூ சந்தானம்… ஜி.வி. டூ துல்கர்… இந்த வார ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் சூப்பர் ஹிட் படங்கள்..!

உடனே இந்த விஷயத்தினை சேரனின் காதுக்கு எடுத்து சென்று விட்டார். ஏற்கனவே கோபத்தில் இருந்த சேரன் பாண்டிராஜை மொத்த யூனிட் முன்பு நிறுத்தி கெட்ட வார்த்தைகளால் கடுமையாக சாடி விட்டாராம். 

இதை தாங்க முடியாதவர். இனிமேலும் இந்த தொல்லையை தாங்கி கொண்டு இருக்க முடியாது என வேலையே வேண்டாம் எனக் கிளம்பிவிட்டாராம். சேரனைத் தொடர்ந்து சிம்பு தேவன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top