பிரேமம் படத்துக்கு ஏன் கேஸ் போடல!.. சேரன் சொன்ன செம மேட்டரு.. அட்லீ ஹேப்பி ஆகிடுவாரு!..
பிரேமம் படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னிடம் வந்து அல்போன்ஸ் புத்திரன் எனும் இயக்குனர் அப்படியே உங்களுடைய ஆட்டோகிராப் படத்தை பார்த்துவிட்டு காப்பி அடித்து இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் அந்தப் படம் மிகப்பெரிய வசூலை அள்ளி இருக்கிறது.
நீங்கள் அல்போன்ஸ் புத்திரன் மீது கேஸ் போட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என சொன்னார்கள். நான் அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டேன் என சேரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: குக் வித் கோமாளி புகழ் குழந்தை இப்போ யாரு கையில இருக்கு பாருங்க!.. அந்த படத்துல கிடைச்ச நட்பு அப்படி!
தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு காதல்களை அடுக்கி சொல்லும் கதையாக ஆட்டோகிராப் படத்தை இயக்கி நடித்திருப்பார் சேரன். அவருக்கு அந்த படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதே போன்று ஒரு கதையை கருவாகக் கொண்டு பிரேமம் படத்தை இயக்கி அதை விட அதிக வசூலை அள்ளி இருப்பார் அல்போன்ஸ் புத்திரன்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சேரன், என்னிடம் அல்போன்ஸ் புத்திரன் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என சிலர் அந்த படம் வெளியான போது கேட்டனர். வெளிநாட்டு படங்கள் மீது இன்ஸ்பயர் ஆகித்தான் படங்களை எடுக்க வேண்டுமா? நம்ம ஊரில் அல்லது பக்கத்து மாநிலத்தில் எடுக்கப்பட்ட படத்தை தழுவியோ அல்லது இன்ஸ்பையர் ஆகியோ படங்கள் எடுக்கக் கூடாதா? நம்ம கதையை நம்மைவிட சிறப்பாக ஒருத்தர் இயக்கினால் அதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டுமே தவிர பொறாமைப் படக்கூடாது என சேரன் மிகவும் பக்குவமாக பேசியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: கல்யாணத்துக்குப் பிறகும் கன்ட்ரோல் இல்லாமல் திரியும் அசோக் செல்வன் மனைவி!.. கணவரை பார்த்தீங்களா!..
இதே போலத்தான் அட்லீயும் படங்களை இன்ஸ்பயர் ஆகி எடுத்து வருகிறார். அவரைப்போய் காப்பி கேட் என கலாய்ப்பது எல்லாம் பெரிய பாவம் என ரசிகர்கள் பதிவிட்டு சேரனின் வார்த்தைகளை வைத்து அட்லிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.