More
Categories: Cinema History Cinema News latest news

அந்த படத்தின் வாய்ப்பு வேண்டாம்… கமலிடம் கோபித்துக் கொண்ட சேரன்…

இயக்குநர் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த படம் மகாநதி. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் சினிமாக்களில் முக்கியமான இந்தப் படத்தில் சேரன் வேலைபார்த்தார். ஆனால், ஷூட்டிங் முடிவதற்கு முன்பே அவர் கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டாராம். அதற்கு என்ன காரணம்?

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பட்டறையில் இருந்து வந்தவர் சேரன். கே.எஸ்.ஆர் அசோசியேட்டாக வேலைபார்த்த ஆண்களை நம்பாதே படத்தின் மேனேஜராக சேரன் பணியாற்றியிருக்கிறார். தினமும் அவருக்கு பேட்டா கொடுப்பது சேரன் தானாம். அதில், கொஞ்சம் கண்டிப்புடன் பணியாற்றியிருக்கிறார். பின்னாட்களில், கே.எஸ்.ரவிக்குமார் புரியாத புதிர் படத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தவுடன் அவரை நேரில் சந்தித்து உதவி இயக்குநராகச் சேர்ந்திருக்கிறார்.

Advertising
Advertising

பி.எல்.தேனப்பனும் சேரனும் நெருங்கிய நண்பர்கள். இடையில், பலரிடம் கதை சொல்லி இயக்குநராகும் முயற்சியிலும் சேரன் இறங்கியிருக்கிறார். இந்த காலகட்டங்களில் அவருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். நாட்டாமை படத்தில் அசோசியேட்டாக வேலை பார்த்த அவருக்கு மொத்தம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்களாம்.

ஆரம்பத்தில் எங்களுக்கு அம்மா வேணும் என்கிற தலைப்பிலான கதையைப் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் சேரன் சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தில் சரத்குமார், ரேவதி, ஆனந்த்பாபு உள்ளிட்டோர் நடிப்பதாக சேரன் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், என்ன காரணத்தினாலே படம் டேக் ஆஃப் ஆகவில்லை. அதன்பிறகு தேனப்பன் மூலம் ஹென்றி என்கிற தயாரிப்பாளரிடம் பாரதி கண்ணம்மா கதையை சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார். முதலில் அந்தப் படத்தில் நடிக்க இருந்தது விஜயகுமாராம்.

இதை படிங்க: அந்த பாட்டால என் அரசியலே மாறியிருக்கும்…! தவறவிட்ட வருத்தத்தில் கமல்…! அதுவும் எம்.ஜி.ஆர் பாட்டுனா சும்மா..?

கதை சிறப்பாக இருக்கவே அவர் மூலம் நடிகர் கார்த்திக்குப் போயிருக்கிறது. அவருக்கும் கதை பிடித்துப் போயிருக்கிறது. ஆனால், அவருக்கு அட்வான்ஸ் கொடுக்க தயாரிப்பாளரிடம் பணம் இல்லையாம். அவர் மும்பை சென்று பணம் ரெடி பண்ணிவிட்டு வரும்போது, அப்போது பிஸியான நடிகராக இருந்த கார்த்தியிடம் கால்ஷீட் இல்லையாம். அப்படித்தான் படத்துக்குள் நடிகர் பார்த்திபன் வந்திருக்கிறார்.

இடையில், கமலின் மகாநதி படத்திலும் சில காலம் சேரன் வேலை பார்த்திருக்கிறார். தனது நண்பர் பி.எல்.தேனப்பன் மூலம் இயக்குநர் சந்தான பாரதியிடம் உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார். ஒரு நாள் சென்னை நேப்பியர் பாலத்தில் ஷூட்டிங் நடந்திருக்கிறது. கமலும், பூர்ணம் விஸ்வநாதனும் நேப்பியர் பாலத்தில் நடந்து வருவது போன்ற காட்சியைப் படமாக்க வேண்டும். அப்போது, லேஸாக மழை தூறியிருக்கிறது. மழையோடு வானவில் தோன்றவே, அதன் பின்னணியில் காட்சியைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநரும் கமலும் விரும்பியிருக்கிறார்கள்.

மழை தூறியதால், கேமரா நனைந்துவிடக் கூடாதே என கேமரா மேன், கேமராவைத் தூக்கிக் கொண்டு அண்ணா சமாதி அருகில் இருந்த வண்டிக்குப் போய்விட்டாராம். வானவில் மறைவதற்கும் ஷூட் பண்ண வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் இருக்க, கேமரா மேனை ஒருவழியாக சம்மதிக்க வைத்து கேமராவை எடுத்துக் கொண்டு ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதற்குள் மழை நின்று வானவில்லும் மறைந்து போய்விட்டதாம். இதனால், அசோசியேட் உள்பட உதவி இயக்குநர்களுக்குப் பயங்கரமாக டோஸ் விழுந்திருக்கிறது.

இதனால், அந்தப் படத்தில் அசோசியேட்டாக வேலை பார்த்த துரை என்பவர் கோபப்பட்டு, இதென்னடா வேலை என தூக்கியெறிந்துவிட்டுப் போய்விட்டாராம். அசோசியேட்டே போறார், நமக்கு என்ன என சேரனும் கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டாராம். மகாநதி ஷூட்டிங் ஸ்பாட்டில் இதுதான் நடந்திருக்கிறது.

Published by
Akhilan

Recent Posts