சேரன் செய்த மிஸ்டேக்... மொத்தமாக பறிபோன விஜய் படத்தின் வாய்ப்பு... ஆச்சரிய தகவல்

vijay -cheran
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுக்கு படம் இயக்குவது பல இயக்குனர்களுக்கும் கனவாக இருக்கும். இருந்தும் சிலருக்கு சின்ன பிரச்சனையால் அதுவும் தட்டி போன பரிதாபமும் நடந்து இருக்கிறது. ஆனால் இயக்குனர் சேரன் தனது தவறால் அந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டாராம்.
தமிழ் சினிமாவின் ஒரு கட்டத்தில் வெற்றி இயக்குனராக இருந்தவர் சேரன். முதலில் சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவரால் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. இதன் காரணமாக நடிகராக களம் இறங்கினார். ஆனால் அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை.

சேரன்
பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை செல்ல முடியவில்லை என்றாலும் அதன் பிறகு அவருக்கு வரவேற்பு இருந்தும் வாய்ப்புகள் வரவில்லையாம். ஆனால் விஜயினை இயக்க கிடைத்த வாய்ப்பினையே மனுஷன் அசால்ட்டாக தட்டி விட்ட சம்பவமும் நடந்து இருக்கிறது.
இவர் இயக்கி நடித்த திரைப்படம் தவமாய் தவமிருந்து. இருமகன்களை பெற்றா அப்பாவினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜயிடம் கதை கூறினாராம். அந்தக் கதை அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால் உடனே ஓகே சொல்லி, கால்ஷீட் வரைக்கும் கொடுத்திருக்கிறார். ஆனால் தவமாய் தவமிருந்து படப்பிடிப்பு லேட்டாகி விஜய் கால்ஷூட் மிஸ் ஆகிவிட்டது.

Vijay
அந்த நேரத்தில் விஜய் பிஸியாக நடித்து வந்தார். அதனால் மீண்டும் அவருக்கு கால்ஷூட் கொடுக்க முடியவில்லையாம். இது தான் அவர் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறாக சேரன் பல இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்.