Connect with us

Cinema News

பிரசாந்தை கூப்ட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க!.. விசில் போடு பாட்டுல பாவம் அவரு.. பிரபலம் வேதனை!..

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடல் நேற்று வெளியாகி இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டது. ஒரே நாளில் ஏகப்பட்ட முந்தைய ரெக்கார்டுகளை விசில் போடு பாடல் நொறுக்கி உள்ளது.

ஆனால், இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா சரியாக இசையமைக்கவில்லை என்றும் விஜய் மற்றும் பிரபுதேவாவின் அந்த கடைசி ஸ்டெப் டான்ஸ் தான் காப்பாற்றியது என்றும் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கையை சீரழிக்க மாட்டேன்!.. என்ன திடீர்னு விஷால் இப்படி சொல்லிட்டாரு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளில் நடிகர் விஜய்யை மட்டும் காட்டாமல் இந்த படம் பிரசாந்த் சொன்னதை போலவே ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் முதலிலேயே விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் என கோட் டீமை அப்படியே காட்டி விட்டனர்.

மதன் கார்கி வரிகளில் யுவன் இசையில் விஜய் பாடிய இந்த பாடலில் அரசியல் நெடி மற்றும் சாராய வாடை அதிகம் அடிப்பது குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகளும் கண்டனங்களும் கிளம்பி உள்ளன. இந்நிலையில், ராஜு சுந்தரம் மாஸ்டர் பிரசாந்தை ரொம்பவே கஷ்டப்படுத்தியுள்ளார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அந்த ரெண்டு நடிகைகள் கூட நடிக்கதான் ரொம்ப பிடிக்கும்! இப்படி போட்டு உடைச்சிட்டாரே ரஜினி!

கடைசியாக அஜ்மல் வந்து ஆடும் போது விஜய், பிரபுதேவா, பிரசாந்த் எல்லாம் ஆடாமல் போய் விடுவார்கள் அந்த இடத்தில் அஜ்மலுக்கு பதில் பிரசாந்தை பயன்படுத்தியிருக்கலாம். இந்த வயதில் மனுஷனுக்கு இப்படியொரு கஷ்டமான ஸ்டெப்ஸை கொடுத்திருக்கின்றனர். ஆனாலும், விஜய் மற்றும் பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து அவர் சிறப்பான நடனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையை கேட்ட ரசிகர்கள் அனிருத்தை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என கமெண்ட் போட்டு யுவனை பங்கம் பண்ணிட்டாங்க, அடுத்தடுத்த பாடலில் யுவன் ஸ்கோர் செய்தால் தான் உண்டு. இல்லையென்றால் உப்புமா படங்களுக்குத்தான் இசையமைக்க வேண்டும் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விரட்டி விரட்டி வெட்டும் விஷால்!.. ரத்தினம் டிரெய்லரை பார்த்தீங்களா?.. ஹரி இன்னும் திருந்தல போல!..

google news
Continue Reading

More in Cinema News

To Top