விரட்டி விரட்டி வெட்டும் விஷால்!.. ரத்தினம் டிரெய்லரை பார்த்தீங்களா?.. ஹரி இன்னும் திருந்தல போல!..

ஹரி இயக்கம்னாலே தாமிரபரணி, வேல், சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம் 1,2 மற்றும் 3, பூஜை படங்களை போல எடிட்டிங் ஸ்பீடாகவும் படம் முழுக்க ஹீரோவோ அல்லது வில்லனோ அருவாவை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்பார். அதற்கு எந்தவொரு பங்கமும் இல்லாமல் அப்படியே ஹரி படம் போலவே உருவாகியிருக்கிறது ரத்னம்.

இப்படி படங்கள் வந்ததால் தான் ஹரியை ட்ரோல் செய்து படங்கள் ஓடாமல் போனது. ஆனால், அதை எல்லாம் மாற்றிக் கொள்ள மாட்டேன் இன்னொரு ஹீரோ சிக்கினால் போதும் அதே டெம்பிளேட் படத்தை அப்படியே எடுப்பேன் என ஹரி மாறாமல் அப்படியே பூஜை 2, சண்டக்கோழி 3 போல வந்திருக்கிறது ரத்னம்.

இதையும் படிங்க: அந்த ரெண்டு நடிகைகள் கூட நடிக்கதான் ரொம்ப பிடிக்கும்! இப்படி போட்டு உடைச்சிட்டாரே ரஜினி!

எப்போ படம் எடுக்க நினைத்தாலும் சண்டைக்கோழி படத்தை பார்த்து விட்டுத் தான் படம் பண்ண ஆரம்பிப்பேன் என்றும் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் தான் தனக்கு தாமிரபரணி, பூஜை படங்கள் எடுக்கவே இன்ஸ்பிரேஷன் என ஹரி சமீபத்திய பேட்டியில் சொல்லியிருந்தார்.

அதே போல இந்த படத்தையும் எடுத்து வைத்திருக்கிறார். சூர்யாவுக்கு சொன்ன அருவா படத்தின் கதைதான் இதுவா என தோன்ற வைக்கும் அளவுக்கும் படம் முழுக்க அருவாவை வைத்துக் கொண்டு விஷால் சண்டை போடுகிறார். சமுத்திரகனி, முரளி சர்மா, கெளதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யோகி பாபு எல்லாம் சண்டை போடும் காட்சிகள் குபிரேன சிரிப்பை வரவழைக்கிறது.

இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளியான யானை படத்தில் நடித்த அதே பிரியா பவானி சங்கர் இந்த படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கரை போட்டுத் தள்ள அடியாட்கள் துரத்துவதும் கில்லி விஜய் போல விஷால் பிரியா பவானி சங்கருக்காகஎதிரிகளை பந்தாடுவது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்றும் டிரெய்லரில் பார்க்கும் போது தெரிகிறது.

கடைசியாக பிரியா பவானி சங்கர் நடித்த பல படங்கள் ஃபிளாப் ஆகி வந்த நிலையில், மார்க் ஆண்டனிக்கு பிறகு விஷாலுக்கு ரத்னம் வெற்றியை கொடுக்குமா என்பது ஏப்ரல் 26ம் தேதி தெரிந்து விடும்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it