அப்பா பெயரையே பயன்படுத்த மாட்டியா?.. சிவாஜி மகனுக்கு என்ன நிலைமை ஆச்சு தெரியுமா?.. பிரபலம் பேச்சு!..

by Saranya M |   ( Updated:2024-06-18 08:56:18  )
அப்பா பெயரையே பயன்படுத்த மாட்டியா?.. சிவாஜி மகனுக்கு என்ன நிலைமை ஆச்சு தெரியுமா?.. பிரபலம் பேச்சு!..
X

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் பீனிக்ஸ் வீழான் படம் உருவாகியுள்ளது. அந்தப் படத்தின் பூஜையில் தனது அப்பா விஜய் சேதுபதியை அழைக்காமல் சூர்யா தன்னிச்சையாக படத்தை ஆரம்பித்தார். ஆனால் தற்போது, படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு தனது தந்தை விஜய் சேதுபதியை அழைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும், அப்பா விஜய் சேதுபதியை தந்தையர் தினத்துக்காக தான் அழைத்து நின்று மற்றபடி ஒன்றும் இல்லை என சூர்யா பேசியிருப்பது மிகப்பெரிய தவறு என சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், செய்யாறு பாலு புதிய வீடியோவில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக காரணமே அவரது தந்தைதான் என்றும் சிவாஜி கணேசன் மகன் பிரபுக்கு தமிழ் சினிமாவில் என்ன நிலைமை நேர்ந்தது என்று தெரியுமா என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: நடிக்கனு கூப்பிட்டு அவங்க எதிர்பார்த்ததே வேற! குஷ்பு படத்தில் நடிகைக்கு ஏற்பட்ட அவலம்

சிவாஜி கணேசன் தனது மகன் பிரபுவை போலீஸ் அதிகாரியாகவோ அல்லது விளையாட்டு வீரராகவும் மாற்ற முயற்சித்தார். ஆனால், அவரை சினிமாவில் ஹீரோவாக கொண்டுவர பல இயக்குனர்கள் முயற்சி செய்த நிலையில், ஆரம்ப காலகட்டத்தில் அதையெல்லாம் வேண்டாமென தவிர்த்து வந்தார்.

நடிப்பது அவ்வளவு எளிது அல்ல என்றும் பத்திரிக்கையாளர் புல்லட் மணியை அழைத்து சங்கிலி படத்தில் தனது மகன் நடிக்கப் போகிறான். அந்த படத்தில் அவன் சரியாக நடிக்கவில்லை என்றால். என்னுடைய மகன் என்பதற்காக உயர்த்தி எழுதாதீர்கள், கிழித்து தொங்க விடுங்கள். நன்றாக நடித்தால் மட்டும் சிறப்பாக எழுதுங்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக சிம்புவைப் பட்டை தீட்டுகிறாரா கமல்…? மணிரத்னம் படம் வந்தா தான் விஷயம் தெரியும்..!

அப்படியெல்லாம், நடிகர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், இன்று விஜய் சேதுபதியின் மகன் பேசுவது தன்னடக்கம் இல்லாமல் நடந்து கொள்வது, அப்பாவின் தயவே இல்லாமல் வருகிறேன் என்று கூறுவது எல்லாம் எத்தனை நாட்களுக்கு அவருக்கு சாதகமாக அமையும் என்றே தெரியாது.

சாதாரண விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாகி 50 படங்களில் நடித்து தனக்கான சாம்ராஜ்ஜியத்தை தானே உருவாக்கி வைத்துள்ளார். ஆனால், சூர்யா தனது அப்பா பெயரை கூட பயன்படுத்தாமல் வருகிறேன் என முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க முடியுமா? அடக்கத்துடன் பேசினால் தான் இங்கே நீடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உலக நாயகனுக்கே பயமா…? தன்னைத் தக்க வைக்கப் போராடும் கமல்…! வேறு கோணத்தில் சிந்தித்த பிரபலம்..!

Next Story