Connect with us

Cinema History

கண்ணதாசனை 2 நாட்களாக வலைவீசி தேடிய முதல்வர் எம்.ஜி.ஆர்!.. காரணம் இதுதான்!…

50,60களில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பல பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். காதல், சோகம், கண்ணீர், மரணம், தத்துவம் என பல விஷயங்களை தனது பாடல்களில் ஆசால்ட்டாக டீல் செய்தவர். எம்.ஜி.ஆர்,சிவாஜி பாடல்கள் என சொல்வது போல் கண்ணதாசன் பாடல்கள் எனவும் ரசிகர்கள் கூறினர். கண்ணதாசன் மரணத்தை எழுதினால் அது அந்த மரணத்திற்கே பெருமை சேர்க்கும் அளவுக்கு இருக்கும். இன்னமும் பல ஊர்களில் ஒருவர் மரணமடைந்து இறுது ஊர்வலம் செல்லும் போது ‘வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ’ என கண்ணதாசன் எழுதிய பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

kannadasan

எம்.ஜி.ஆருக்கு பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் திமுகவை ஆதரித்த நேரத்தில் கண்ணதாசன் காங்கிரஸை ஆதரித்தார். ஏனெனில் காமராஜர் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். எனவே, சில அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சித்தார். எனவே, தன்னுடைய படங்களில் கண்ணாதாசனுக்கு வாய்ப்பு கொடுப்பதை எம்.ஜி.ஆர் தவிர்த்துவிட்டார்.

இதையும் படிங்க: மகள் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த கண்ணதாசன்!.. கடவுள் மாதிரி வந்த பாட்டு!..

அதன்பின் எம்.ஜி.ஆர் முதல்வராகிவிட்டார். ஒருசமயம், கண்ணதாசனின் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் போன் செய்தார். ஆனால்,கண்ணதாசன் தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக காரைக்குடி சென்றுவிட்டதாக அவரின் உதவியாளர் தெரிவித்தார். அடுத்தநாள் எம்.ஜி.ஆர் போன் செய்தபோது இன்னும் அவர் வரவில்லை என சொன்னார். காரைக்குடியில் பெண் பார்த்துவிட்டு கண்ணதாசன் திருச்சியில் தனது நண்பர்களை சந்தித்துவிட்டு ஒரு ஹோட்டலில் தங்கினார். அங்கிருந்து வீட்டிற்கு போன் செய்தார். அப்போது அவரின் உதவியாளர் ‘உங்களை தொடர்பு கொள்ள எம்.ஜி.ஆர் 2 நாட்களாக முயற்சி செய்து வருகிறார். உடனே அவரிடம் பேசுங்கள்’ என சொல்ல, வீட்டிற்கு வந்து பேசுகிறேன் என கண்ணதாசன் சொல்லிவிட்டார்.

கொஞ்ச நேரத்தில் திருச்சி லோக்கல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து ‘உடனே முதல்வரிடம் பேசுங்கள்’ என சொல்ல கண்ணதாசன் உடனே தொலைப்பேசியில் எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டார். ‘உங்களை அரசவை கவிஞராக நியமித்துள்ளேன். வந்து பதவியேற்று கொள்ளுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொல்ல கண்ணதாசனுக்கோ இன்ப அதிர்ச்சி. அடுத்த நாள் சென்னை வந்து எம்.ஜி.ஆரை சந்தித்து பதவி ஏற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரிடம் ‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். அப்போது உங்களுக்கு என்னால் நன்றி சொல்ல முடியாது. எனவே இப்போதே சொல்கிறேன். மிக்க நன்றி’ என சொல்ல கண்ணதாசனை எம்.ஜி.ஆர் கட்டித்தழுவி கொண்டார்.

இதையும் படிங்க: உங்கப்பன் விசில கேட்டவன்.. விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ரஜினிகாந்த்.. பயில்வான் ரங்கநாதன் ஒரே போடு!

google news
Continue Reading

More in Cinema History

To Top