ரஜினிகாந்த் படத்துக்கு காலை உடைத்துக்கொண்டு வந்து நின்ற ரகுவரன்… எந்த படத்துக்கு தெரியுமா?

by Akhilan |
ரஜினிகாந்த் படத்துக்கு காலை உடைத்துக்கொண்டு வந்து நின்ற ரகுவரன்… எந்த படத்துக்கு தெரியுமா?
X

Raghuvaran: வில்லன் நடிகர்களிலேயே தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் ரகுவரன். பொதுவாக அவர் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தாலும் ரஜினி படங்கள் அவர் வில்லத்தனம் வேற லெவலில் இருக்கும். அப்படம் ஒரு படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1980களில் சினிமாவுக்கு வந்தவர் ரகுவரன். ஹீரோவாக அவர் நடித்த நிறைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அவர் நடிப்பில் வெளியான ஏழாவது மனிதன் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பெரிய அளவில் ரகுவரனுக்கு வாய்ப்புகளும் குவிந்தது. அப்படி ஒரு படம் தான் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய மிஸ்டர் பாரத்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசையில் பாக்கியாவாக மாறிய முத்து… ரசிகர்களை பார்த்தா எப்படி தெரியுது?

இப்படத்தில் முக்கிய வில்லன் சத்யராஜ் தான் என்றாலும் ரகுவரனுக்கும் மைக்கேல் என்ற கேரக்டர் நல்ல வரவேற்பை தந்தது. ஒருமாதிரியான நடையுடன் ஸ்டைலாக நடித்திருப்பார். ஆனால் அந்த ஸ்டைலுக்கு பின்னால் வித்தியாசமாக ஒரு காரணம் இருந்ததாம். மிஸ்டர் பாரத் படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்க இருந்த நிலையில் ரகுவரனுக்கு திடீரென பைக்கில் விபத்து நடந்து விடுகிறது.

காலில் நல்ல அடிபட்டு விடுவதால் நடக்கும் போது நொண்டும்படியான நிலையில் இருந்தாராம். அடுத்த நாள் யாருக்கும் தெரியாமல் தன் வலியை பொறுத்துக் கொண்டு சாதாரணமாக நடந்து சூட்டிங் வந்தாராம். ஆனால் அவர் நடையில் ஒரு வித்தியாசத்தை கண்ட எஸ் பி முத்துராமன் உனக்கு காலில் அடிபட்டு இருக்கிறதா என கேட்டான். முதலில் ரகுவரன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: குடும்பமா சேர்ந்து அசிங்கப்படுத்திட்டாங்களா… கோபியை வெளியேத்த முடிவெடுத்த எழில்…

அந்த பேட்டியைக் காண: https://twitter.com/arunaguhan_/status/1789914299646853585
Next Story