புலி பட தோல்விக்கு இதுதான் காரணம்!.. ஒருவழியா ஒத்துக்கிட்ட சிம்புதேவன்!.. அடுத்து போட் ஓடுமா?..

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சிம்புதேவன். ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், ஷங்கர் தயாரிப்பிலேயே அந்த படத்தை இயக்கினார். ஆரம்பத்தில் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சிம்புதேவன் ஷங்கர் அலுவலகத்திற்கு சென்று தன்னிடம் ஒரு கதை இருக்கிறது என எழுதி கொடுத்து விட்டு வந்தேன். நினைத்துக் கூட பார்க்கவில்லை 4 நாட்களில் அவரது அலுவலகத்திடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது என்றார்.
முதலில் காதல் கதை ஒன்றை தான் கையில் வைத்திருந்தேன். ஷங்கர் சாரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த கதையை சொன்னேன். அவரும் பொறுமையாக கேட்டார். ஆனால், அதன் பின்னர், இன்னொரு நாள் டிஸ்கஷனின் போது தான் இம்சை அரசன் கான்செப்ட் வந்தது. இது நல்லா இருக்கே, முதலில் இதை செய்வோமே என்றார். அப்படித்தான் அந்த படம் உருவானது.
இதையும் படிங்க: எங்க ஊர்ல இப்படி பண்ணுனா திட்டுவாங்க! கோலிவுட்டில் நடந்த சம்பவத்தால் நடுங்கிய மம்மூட்டி
இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் முடிந்த பின்னர், அறை எண் 305ல் கடவுள் படத்தையும் ஷங்கர் தயாரிப்பில் இயக்கினேன். ஷங்கர் சார் ஒரு சிறந்த மனிதர், நல்ல கிரியேட்டர் என்றார்.
புலி படத்தின் தோல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்த சிம்புதேவன் அந்த படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சரியாகவே செய்தோம். அந்த சமயத்தில் ரெய்டு வந்தது ஒரு பிரச்சனையாக மாறியது. படம் வெளியானதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. குழந்தைகளுக்கான படமாகவும் இம்சை அரசன் போல அனைவருக்குமான படமாகவும் வரும் என்று தான் எதிர்பார்த்தோம்.
இதையும் படிங்க: எல்லாம் மும்பை செய்த மாயம்!.. ரகு தாத்தா ஆடியோ லாஞ்சுக்கு ஓப்பன் டிரெஸ்ஸில் வந்த கீர்த்தி சுரேஷ்!..
தியேட்டருக்கு வந்த புதிதில் கடுமையான விமர்சனங்கள் குவிந்தன. ஆனால், அதன் பின்னர் டிவியில் அந்த படம் எப்போது போடப்பட்டாலும், பலரும் கால் செய்து பாராட்டுகின்றனர் என்றார். ஒரு படத்தை வெற்றிப் படமாகவே கொடுக்க முடியாது. ஆடியன்ஸ் பார்க்கும் வரை அந்த படத்தின் ரிசல்ட்டை தீர்மானிக்க முடியாது என்றார்.
அடுத்ததாக யோகி பாபு, கெளரி கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள போட் படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். விரைவில் அந்த படம் திரைக்கு வரவுள்ள நிலையில், அதுதொடர்பாக யூடியூப் சேனல்களில் புரமோஷன் செய்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் இவரும் சில போர்ஷன்களை செகண்ட் யூனிட் இயக்குநராக இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ் பட டைரக்டரை ‘கிராக்’னு சொன்ன மம்முட்டி… அப்புறம் எப்படி படம் பிக்கப் ஆச்சு?