பில்டிங்தான் ஸ்டாராங்… ஆனா பேஸ்மெண்ட் ரொம்ப வீக் போல… சின்மயி உடைத்த சீக்ரெட்…

Singer Chinmayee: சின்மயி தமிழ் சினிமா பாடகிகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். ஒரு தெய்வம் தந்த பூவே பாடல்தான் இவரின் முதல் பாடல். இப்பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுதந்தது.
மேலும் இவர் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். சில்லுனு ஒரு காதல், சுறா போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்தில் திரிஷாவிற்கு கொடுத்த இவரின் குரல் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதையும் வாசிங்க:எதிர்பாராததை எதிர்பாருங்கள்! லியோவில் சஸ்பென்சாகவே இருந்த அந்த பிரபலம் – இவரிடம் இப்படியொரு அவுட்புட்டா?
இவர் சில வருடங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் இருந்தார். Me too எனும் ஹேஷ்டேக் மூலம் சினிமா துறையில் பெண்களை பாலியல் துன்புறுத்தும் அனைவரையும் வெளிச்சம் போட்டு காட்டினார். இதில் வைரமுத்துவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இவர் மேலும் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார். இவர் ரகு ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷாவிற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். ஆனால் இதன் மூலம் இவர் பல பிரச்சினைகளையும் சந்தித்தார். இவர் டப்பிங் சங்கத்திலிருந்து சில காலம் தடை செய்யப்பட்டுள்ளார். அந்த சங்கத்தில் இல்லாதவர்கள் எங்கும் டப்பிங் செய்ய கூடாது எனும் ஒரு சட்டம் உள்ளதாம். தற்போது இவர் லியோ திரைப்படத்தில் குரல் கொடுத்துள்ளதால் இவர் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிங்க:அடேங்கப்பா!.. லியோ படத்தை முதல் நாளே தியேட்டரில் பார்த்த சூப்பர்ஸ்டார்?.. உண்மை என்ன?..
இது ஒருபுறம் இருக்க இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய குணாதிசயத்தை பற்றி பகிர்ந்துள்ளார். இவர் என்னதான் சமூக வலைதளங்களில் மிகவும் தைரியமான பெண்மணியாக வலம் வந்திருந்தாலும் இவர் திரைப்படங்களில் சோகமான காட்சிகளை பார்க்க பயப்படுவாராம். மேலும் எந்த ஒரு படம் பார்க்க சென்றாலும் இவர் இயக்குனரிடம் கேட்கும் முதல் கேள்வி இப்படம் சோகமான கிளமேக்ஸில் முடியுமா அல்லது சந்தோஷமாக முடியுமா என்பதுதானாம்.
ஒரு வேளை சோகமான திரைப்படமாக இருந்தால் அப்படத்தினை பார்க்க மாட்டாராம். சினிமா என்பது ஒரு நடிப்புதான் என்றாலும் அதிலும் கூட சோக காட்சிகளை தவிர்த்து வருகிறார் சின்மயி. இது கேட்பதற்கு வேடிக்கையாகதான் இருக்கிறது.
இதையும் வாசிங்க:உங்கள வச்சி படம் பண்ண முடியாது!. விஜய்க்கு ‘நோ’ சொல்லிவிட்டு சிம்புவிடம் போன இயக்குனர்!…