Connect with us
Silambarasan

Cinema News

சிம்புவுக்கு எதிராக சதி செய்வது யார் தெரியுமா?? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்…

தமிழ் சினிமாவின் யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்த சிலம்பரசன் சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக ஒரு கட்டத்தில் சினிமாவின் மீது ஈடுபாடு காட்டாமல் இருந்தார். ஆதலால் அவரின் மீது தயாரிப்பாளர்கள் பல விமர்சனங்களை வைத்து வந்தனர். படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை எனவும் டப்பிங்கிற்கு கூட வருவதில்லை எனவும் கூறி வந்தனர். இந்த விமர்சனங்களால் சிம்புவின் கேரியரே குளோஸ் என்று பல பத்திரிக்கைகள் எழுதத் தொடங்கிவிட்டன.

கம்பேக் கொடுத்த சிம்பு

மேலும் அவரது உடல் எடையும் அதிகமாக இருந்ததால் பல்வேறு கிண்டல் கேலிகளுக்கு உள்ளானார். எனினும் யாரும் எதிர்பாராதவிதமாக சிலம்பரசன் தனது எடையை குறைத்து மாஸ் காட்டினார். “மாநாடு” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து அசரவைத்த சிம்பு, அதன் பின் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து “பத்து தல” திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. “பத்து தல” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றபோது அதில் சிம்பு மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். அவரது பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனினும் அவர் பேசும்போது அவருக்கு எதிராக சதி நடப்பது போன்ற தொனியிலேயே பேசுகிறார் என்று கூறப்பட்டது.

சிம்புவுக்கு எதிராக சூழ்ச்சி?

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர், “நடிகர் சிம்பு ஒவ்வொரு விழா மேடைகளிலும் தன்னை யாரோ சூழ்ச்சி செய்து வளரவிடாமல் செய்கிறார்கள் என்பது போல் பொருள்பட பேசுகிறாரே. உண்மையாகவே கோலிவுட்டில் யாராவது அப்படி நினைக்கிறார்களா? இல்லை அவராகவே Sympothy வர வேண்டும் என்று பேசுகிறாரா? என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “சிம்புவுக்கு எதிராக இந்த சினிமா உலகிலே யாரும் சதி செய்வதாக எனக்கு தெரியவில்லை. அது ஒரு பிரமை என்றுதான் தோன்றுகிறது. சிம்பு ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகள் எல்லாம் அவருக்கே நன்றாக தெரியும். அதை அவர் முழுவதுமாக கலைந்துவிட்டார் என்றால் அவரது இமாலய வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது” என கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top