தளபதி 67 படத்தில் சீயான் விக்ரம்?? லோகேஷ் செமத்தியா ஒரு பிளான் வச்சிருக்கார் போல…

Thalapathy 67
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் “தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் விஜய்யுடன் மிஷ்கின் நடித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆன நிலையில் அதன் பின் விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் சரியாகப் போகவில்லை. மேலும் சமீபத்தில் வெளியான “வாரிசு” திரைப்படமும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. ஆதலால் “தளபதி 67” திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Thalapathy 67
லோகேஷ் கனகராஜ் இயக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்ற “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு முதலில் சீயான் விக்ரமைத்தான் அணுகினார் இயக்குனர். ஆனால் அந்த கதாப்பாத்திரம் மிகச்சிறிய கதாப்பாத்திரமாக இருப்பதாக கூறி அதில் நடிக்க மறுத்துவிட்டார் விக்ரம்.
எனினும் அந்த கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டப்பிறகு, “லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்” என்ற ஒன்றை உருவாக்கப்போவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதன் படி “ரோலக்ஸ்” என்ற கதாப்பாத்திரத்திற்காகவே தனியாக ஒரு திரைப்படத்தையே லோகேஷ் இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடிக்காதது ஏன்?? “கூண்டுக்கிளி” திரைப்படத்தில் அப்படி என்ன நடந்தது??

Vikram
இதனை தொடர்ந்து “தளபதி 67” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க சீயான் விக்ரமை லோகேஷ் அணுகினாராம். ஆனால் அப்போதும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். இந்த நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சீயான் விக்ரம் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகவுள்ளது. மேலும் இதில் நடிக்க சீயான் விக்ரம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.