More
Categories: Cinema News latest news

கர்ண கொடூரமா இருக்கே!.. இதுக்கு கார்ட்டூன் சேனலே பார்க்கலாம் போல.. டீசரே இப்படின்னா?..

Karna: சியான் விக்ரமை வைத்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட மகாவீர் கர்ணன் திரைப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில், நேற்று திடீரென அந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் மினி டீசர் வெளியாகியுள்ளது. சூர்யபுத்ர கர்ணா என பெயர் மாற்றம் செய்யபட்டு வெளியான டீசர் ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஆர் எஸ் விமல் கர்ணன் படத்தை கண்டிப்பாக எடுத்து தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு மீண்டும் அந்த படம் ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சல்மான் கானிடம் சரக்கு இல்லை!.. கிரிக்கெட் வீரரை சட்டென கரெக்ட் செய்த பூஜா ஹெக்டே?..

கர்ணன் படத்தின் புதிய டீசரை பார்த்து ரசிகர்கள் சியான் விக்ரம் என்ன பீஷ்மர் லுக்கில் இருக்கிறாரே என கலாய்த்து வருகின்றனர். மேலும், பாகுபலி படம் போல் பண்ணுகிறேன் என சமந்தாவின் சாகுந்தலம் படத்தைப் போல சொதப்பல் சிஜி காட்சிகளுடன் அறிமுக டீசர் வெளியாகியுள்ள நிலையில், சியான் விக்ரம் அந்தப் பக்கம் போகாமல் இருப்பதே நல்லது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பிரபாஸை வைத்து 600 கோடியில் உருவாக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படமே அனிமேஷன் சரியில்லாமல் அடி வாங்கியது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் கர்ணன் திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், முதல் கோணல் முற்றிலும் கோணலாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: கிணத்த காணோம்கிற மாதிரி சொல்றாரே!. சந்திரமுகி 2 ரிலீஸ் தள்ளிபோனதற்கு காரணம் இதுதானாம்!..

கர்ணன் படம் ஏற்கனவே சிவாஜி கணேசன் நடிப்பில் அப்போதே பிரம்மாண்ட செலவில் இன்றளவும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக உள்ளது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜியின் வளர்ச்சி பல மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில், சுமாரான விஷுவல்ஸ் கொடுத்தால் ரசிகர்கள் நிச்சயம் அந்த படத்தை பார்க்க விரும்ப மாட்டார்கள் என முதல் டீசருக்கு 3000 விமர்சனங்கள் குவிந்துள்ளன.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் அசத்திய சியான் விக்ரம் கர்ண்ணனாக நடிக்கவும் கச்சிதமாக இருப்பார் என்பது உண்மைதான். ஆனால், அந்த படம் கேட்கும் பட்ஜெட்டை ஒதுக்குவது மட்டுமின்றி மேக்கிங்கிலும் ராஜமௌலி போல தரமான படத்தை கொடுத்தால் தான் போட்டக் காசு திரும்பி வரும் என்கின்றநர்.

நடிகர் விக்ரம் ஆரம்பத்தில் இந்த படத்துக்கு 19 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருந்ததாகவும், தற்போது 50 கோடி கொடுத்தால் இந்த படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன் என டீலிங் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சூர்யாவின் கங்குவா படத்தை போல இந்த படமும் 3டியில் உருவாகிறதாம்.

Published by
Saranya M

Recent Posts