கிணத்த காணோம்கிற மாதிரி சொல்றாரே!. சந்திரமுகி 2 ரிலீஸ் தள்ளிபோனதற்கு காரணம் இதுதானாம்!..

தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர் பி.வாசு. பன்னீர் புஷ்பங்கள் முதல் சந்திரமுகி 2 வரை பல நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் இவர். குறிப்பாக பிரபு, சத்தியராஜ் ஆகியோரை வைத்து அதிக படங்களை இயக்கியிருக்கிறார்.

பி.வாசு இயக்கத்தில் பிரபு நடித்த சின்னத்தம்பி உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதேபோல், என் தங்கச்சி படிச்சவ, வேலை கிடைச்சிடுச்சு, வால்டர் வெற்றிவேல் என சத்தியராஜுக்கும் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோல் ரஜினியை வைத்து பணக்காரன், உழைப்பாளி, மன்னன், சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இதையும் படிங்க: புதிய அவதாரம் எடுக்கும் நெல்சன்!. ஆனா அதுக்கும் பெரிய மனசு வேணும்!.. செம கிரேட்டுப்பா!..

ரஜினியின் குட்புக்கில் இருக்கும் இயக்குனர்களில் பி.வாசுவும் ஒருவர். பாபா தோல்விக்கு பின் 3 வருடங்கள் ரஜினி எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தபோது அவருக்கு சந்திரமுகி எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் பி.வாசு. அதேநேரம், தற்போது உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்கவில்லை. ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார்.

இப்படத்தை வினாயகர் சதுர்த்தி விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. செப்டம்பர் 15ம் தேதி மார்க் ஆண்டனி படம் வெளியானதால் இப்படம் வெளியாகவில்லை, சில கிராபிக்ஸ் காட்சிகள் பாக்கி என சில காரணங்கள் சொல்லப்பட்டது. இப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: சொகுசு கார்.. சொந்தமா பண்ணைத் தோட்டம்!.. என்னம்மா வாழுறாருப்பா ஜிபி முத்து!.. புது வீடியோ பார்த்தீங்களா?..

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பி.வாசு இப்படம் ஏன் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவில்லை என தெரிவித்தார். அவர் கூறியுள்ள காரணம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இப்படி நடக்குமா? இதை நம்பலாமா?.. உருட்டாக இருக்குமோ என்றெல்லாம் எண்ண தோன்றியது.

அவர் சொன்னது இதுதான். பட ரிலீஸுகுக் ஒரு வாரம் இருக்கும்போது இப்படத்தின் 480 ஷாட்கள் கொண்ட ஃபுட்டேஜ் காணாமல் போய்விட்டது. அதை எங்கு வைத்தார்கள் என்றே தெரியவில்லை. நான்கைந்து நாட்கள் தேடி அதை கண்டுபிடித்தார்கள். அதனால்தான் செப்டம்பர் 15ம் தேதி இப்படம் வெளியாகவில்லை’ என வாசு கூறினார்.

இதையும் படிங்க: ‘வணங்கான்’ திரைப்படத்தின் கதை இதுதான்! போஸ்டரின் மூலம் மிரட்டிய பாலா – வைரமாவாரா அருண்விஜய்?

 

Related Articles

Next Story