லோகேஷ் கனகராஜ் பக்கத்துல விக்ரம்!.. அதுவும் புது கெட்டப்!.. ஒருவேளை ரோலக்ஸுக்கு ரிவீட் இருக்குமோ?..

இயக்குநர் ஷங்கரின் 60வது பிறந்தநாள் விழாவில் தமிழ் சினிமாவின் பல முன்னணி இயக்குநர்கள் மற்றும் சில முக்கியமான நடிகர்கள் கலந்து கொண்ட புகைப்படத்தை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷங்கர் ஏகப்பட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கி பான் இந்தியா படங்கள் தற்போது உருவாக அப்போதே விதைப் போட்டவராக உள்ளார்.
இதையும் படிங்க: அப்போ எல்லாம் 250 நாள்!.. இப்போ 50 நாளுக்கே ஆடுறாங்க!.. மாமன்னன் டீமை மானபங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்!..
ஷங்கர் பிறந்தநாள் பார்ட்டி:
கமல்ஹாசனின் இந்தியன் 2, ராம்சரணின் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வரும் ஷங்கருக்கு அந்த இரு படங்களின் குழுவும் சேர்ந்து கேக் கட்டிங் நிகழ்ச்சியை நேற்று ஒன்றாக நடத்தியது. அதில், நடிகர் ராம் சரண் மற்றும் சியான் விக்ரம் கலந்து கொண்டனர்.
மேலும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, லிங்குசாமி உள்ளிட்ட பல இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் ஹீரோவுக்கு அந்த மலையாள சரக்கு நடிகையுடன் திருமணமா?.. நடிகையே போட்ட போஸ்ட்!..
லியோ கிளைமேக்ஸில் விக்ரமா?
நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் பார்ட்டியில் லோகேஷ் கனகராஜ் அருகே சியான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் காட்சி தந்தது தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கிளைமேக்ஸில் ரோலக்ஸ் எனும் வெயிட்டான கேமியோ ரோலில் சூர்யா நடித்து மிரட்டிய நிலையில், அதே போல விஜய்யின் லியோ படத்தின் இறுதியில் சியான் விக்ரம் இந்த லுக்கில் வரப் போகிறாரா? என்றும் ரசிகர்கள் இப்பவே டீகோட் செய்ய ஆரம்பித்து விட்டனர். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்ததாக சியான் விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: தளபதி 68-ல் தெறிக்கவிடும் விஜய்!.. இப்படி ஒரு டிவிஸ்ட்டா?!… செம ட்ரீட் இருக்கு..