Cinema News
Flop படங்கள் மட்டுமே கொடுத்து டாப்பில் இருக்கும் லக்கி நடிகர் இவர் மட்டும் தான்??
Published on
சினிமா துறையில் முதல் படத்திலேயே ஜொலித்து அதன் பின் காணாமல் போனவர்கள் பலரையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் படங்களில் நடிக்க தொடங்கிய காலங்களில் கவனிக்கத் தவறி அதன் பின் இடையில் திடீரென விஸ்வரூபம் எடுத்த நடிகர் என்றால் அது சீயான் விக்ரம் தான்.
1990களில் “என் காதல் கண்மணி”, “காவல் கீதம்”, “மீரா” போன்ற பல திரைப்படங்களில் நடித்த விக்ரம் தனித்த அடையாளம் இல்லாமல் கவனிப்பார் இன்றி சினிமாவில் வலம் வந்தார்.
எனினும் அதன் பின் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” திரைப்படம் அவரை வேற லெவலில் கொண்டுச் சென்று நிறுத்தியது. சிலர் இன்றும் விக்ரம் நடித்த முதல் திரைப்படம் “சேது” தான் என நினைப்பது உண்டு. அந்த அளவிற்கு அவரது நடிப்புத் திறமை மக்களிடையே பரவலாக அறியப்பட்டது.
அதன் பின் வெரைட்டி நடிகர் என்ற பிம்பத்துக்குள் சென்ற விக்ரம், மக்களை என்டெர்டெயின்மென்ட் செய்யும் வகையில் “தில்”, “தூள்”, “சாமி”, “அருள்”, “ஜெமினி” என பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்தார்.
Split Personality disorder என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட அம்பியாக “அந்நியன்” திரைப்படத்தில் மாஸ் காட்டியதை நாம் மறந்திருக்கமாட்டோம். மேலும் “தெய்வத் திருமகள்” திரைப்படத்தில் மனநலம் குன்றிய தந்தையாக வந்து நம்மை கண்ணீரில் ஆழ்த்தினார்.
ஆனால் அதன் பின் தான் வந்தது வினையே. “தெய்வத் திருமகள்” திரைப்படத்திற்கு பின் அவர் நடித்த “ராஜப்பாட்டை” திரைப்படம் ஃப்ளாப் படங்களுக்கு ஒரு பிள்ளையார் சுழி போல் அமைந்தது. ஆம்!
“ராஜபாட்டை” திரைப்படத்தில் விக்ரம் பல கெட் அப்களில் நடித்திருக்கிறார் என்ற விளம்பரத்தை பார்த்து படத்திற்கு போனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரே பாடலில் அனைத்து கெட் அப்களிலும் வந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
“தாண்டவம்”, “டேவிட்” ஆகிய மேலும் இரண்டு ஃப்ளாப் படங்களை தொடர்ந்து ஷங்கரின் “ஐ” திரைப்படத்தில் உயிரைக் கொடுத்து நடித்தார். ஆனாலும் அது கைக்கொடுக்கவில்லை. அதன் பின் “இருமுகன்”, “ஸ்கெட்ச்”, “சாமி ஸ்குயர்”, “கடாரம் கொண்டான்” என தொடர்ந்து தோல்வி படங்களிலேயே நடித்தார்.
இதனால் கடுப்பாகிப்போன ரசிகர்கள் “கோப்ரா” திரைப்படத்திற்காக வெறிக்கொண்டு காத்திருந்தனர். ஆனால் “கோப்ரா” திரைப்படமும் கொத்திவிட்டது.
இப்படி கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து ஃப்ளாப் படங்களே கொடுத்து வரும் ஒரு முக்கிய நடிகராக விக்ரம் திகழ்ந்து வருகிறார். ஆயினும் அதிசயமாக ஃபீல்ட் அவுட் ஆகாமல் இன்றும் தன்னுடைய இடத்தை தக்க வைத்து வருகிறார் விக்ரம்.
அனேகமாக தமிழ் சினிமாவில் இவ்வாறு பல ஃப்ளாப் படங்களை தொடர்ந்து கொடுத்து இன்னும் கெத்தாக நிற்கிற நடிகர் வேறு யாரும் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளி வர உள்ளது. இதில் தனது கடந்த கால வெற்றியை “விக்ரம்” மீட்டெடுப்பாரா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
Rj balaji _ brindhaRj Balaji: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆர்ஜே பாலாஜி தான் ரேடியோ ஜாக்கியாக இருந்த...
விமர்சனம் செய்வது அவரவர்களின் சுதந்திரம் ஆனால் ஒருவரை டார்கெட் செய்து அடிப்பது பயத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர் ஜே பாலாஜி கூறி...
கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கி வரும் சூர்யா 44 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை கூறியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா, ஜகமே...
Surya: நடிகர் சூர்யாவின் பாலிவுட் அறிமுகம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்...
சொர்க்கவாசல் படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ், அனிருத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் அக்யூஸ்ட் போன்று நிற்கவைக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில்...