Connect with us

Flashback

வளர்த்து விட்டவங்களுக்கு அஜீத் ஒண்ணுமே பண்ணலையே… போட்டுத் தாக்கிய பிரபலம்

அஜீத் ஏன் இந்த மாதிரி பண்ணிட்டாருன்னு எண்ண வச்சிட்டாரே…!

நடிகர் அஜீத் அவரை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்தார் என்ற கேள்விக்கு பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க…

‘தல’ என்று கொண்டாடப்படும் நடிகர் என்றாலே அது அஜீத் தான். அவரை ஆரம்பத்தில் ‘குட்டி அரவிந்தசாமி’ என்றே சொல்வார்களாம். அவர் அழகான நடிகர் என்றாலும் நிறைய மைனஸ் இருக்கு. அவரோட பேச்சை உற்றுக் கவனித்தால் அதுல பிறமொழிக் கலைஞன் தெரிவான்.

அதே போல அவர் ஒரு பைக் ரேசர். முதுகுல ஆபரேஷன் பண்ணினா கூட திரும்பவும் நடிக்க வந்தவர். உடல் குண்டானாலும் கூட ரசிகர்களை ரசிக்க வைத்தவர். ‘டை’ அடிச்சா செட்டாகாதுன்னு ‘பெப்பர் சால்ட் லுக்’ என்ற ஸ்டைலைக் கொண்டு வந்தார்.

மைனஸையே பிளஸ் ஆக்கினார். அவரு பலருக்கும் உதவின்னு கேட்டா வெள்ளந்தியா கொடுத்துடுவாராம். எல்லாருடனும் சமமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடியவர். அஜீத்தை அறிமுகப்படுத்தியவர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம்.

அவர் அப்போது 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார். அந்தக் காலத்துல அது ரொம்ப பெரிய விஷயம். அதுக்கு அப்புறம் அவரு சோழா பொன்னுரங்கத்துக்கு என்ன பண்ணினாரு? அட்வான்ஸ் கொடுத்தாராம் படம் ஒண்ணுமே பண்ணலையாம். 20 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்களாம்.

ஆனா படம் பண்ணாம அதையும் திருப்பிக்கொடுத்து விட்டாராம் அஜீத். காதல் கோட்டை படத்தை அகத்தியன் இயக்கினார். அப்போது அஜீத், தேவயாணி ஜோடி ரொம்பவே பேசப்பட்டது. அதுக்கு அப்புறம் அவரோட மார்க்கெட் ரொம்ப உயர்ந்தது. சிவசக்தி பாண்டியன் தயாரித்த படம் தான் காதல் கோட்டை.

சிவசக்தி என்ற தியேட்டர்ல படத்தை லீஸ்சுக்கு எடுத்து வேலை செய்தவர் தான் சிவசக்தி பாண்டியன். அப்புறம் கொஞ்சம் டெவலப் ஆனதும் தயாரிப்பாளர் ஆகிறார். தொடர்ந்து சிவசக்தி பாண்டியன், தேவா கூட்டணியுடன் காதல் சம்பந்தமாக ஒரே ஜானரில் படங்கள் வந்ததால அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்துட்டாரு.

அஜீத் நினைச்சிருந்தா அவருக்கு ஒரு படத்தைப் பண்ணிருக்கலாம். ஆனா பண்ணலை. அதையும் தாண்டி தொடர்பே இல்லாத சத்யஜோதி பிலிம்ஸ்சுக்கும், போனி கபூருக்கும் படம் பண்றாரு. ஆனா நன்றிக்கடனா என்ன பண்ணினார்னா எதுவுமே பண்ணலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கமெண்ட் பாக்ஸில் பார்த்தால் நெட்டிசன் ஒருவர் அஜீத்தின் மைனஸைப் பட்டியலிட்டுள்ளார். அஜீத்தை அறிமுகப்படுத்திய சோழா பொன்னுரங்கம் தெருவில் நிற்கிறார். சிவசக்தி பாண்டியன் தெருவில் நின்றபோது உதவவில்லை.

ஆசை படம் தந்த வசந்தின் ‘நேருக்கு நேர்’ படத்தில் பாதியில் வெளியேறினார். எஸ்எஸ்.சக்கரவர்த்திக்கு நாமம், எஸ்.ஜே.சூர்யாவின் நியூ படத்தைப் பாதியில் விட்டார். விஜயகாந்தின் இறப்புக்கும் வரவில்லை என்று பட்டியலிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in Flashback

To Top