Connect with us

Cinema History

வாய் உள்ள பொழச்சுக்கும்… படமும் ஜெயிக்கும்… கமலின் படத்தினை பின்னுக்கு தள்ளிய சூப்பர் ஹீரோ!…

படத்தினை சூப்பர்ஹிட்டாக்க புரோமோஷன்கள் படையெடுக்கும் இந்த காலத்தில் நடிகர் பார்த்திபனின் வித்தியாச அணுகுமுறை ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

அறிமுக இயக்குநர், அதுவும் அந்தப் படத்தில் அவரே நாயகன். ஒரு மிகப்பெரிய ஹீரோவோடு போட்டிபோட்டு வெற்றிபெற்ற சம்பவம் தெரியுமா… அப்படி ஒரு கதைதான் பார்த்திபனுடையது. பேச்சில் மட்டுமல்ல சமயோசிதமாக சிந்திப்பதிலும் தான் ஒரு படைப்பாளி என்று நிரூபித்த தருணம் பற்றிதான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஆரம்பத்தில் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பின்னர், தனியாக இயக்குநர் ஆனார். புதிய பாதை படத்தின் கதையை வைத்துக்கொண்டு 2 ஆண்டுகள் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார் பார்த்திபன். ஆனால், யாருமே தயாரிக்க முன்வராத நிலையில், கதையைக் கேட்ட ஏ.சுந்தரம், `நீங்க நடிச்சா மட்டும்தான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்ற ஒரே ஒரு கண்டிஷனோடு படத்தைத் தயாரித்திருக்கிறார்.

அது மிகப்பெரிய ஹிட்டாகவே தமிழ் சினிமாவில் புதிய அவதாரம் எடுத்தார் ஆர்.பார்த்திபன். முதன்முதலில் ஒரே நேரத்தில் நாயகனாகவும் இயக்குநராகவும் பார்த்திபன் அறிமுகமான படம் புதிய பாதை. இந்தப் படம் கமல்ஹாசனின் அபூர்வசகோதரர்கள் படத்தோடு போட்டி போட்டது. 1989 தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியான படத்துக்கு, ஆரம்பத்தில் தியேட்டர்கள் கிடைக்காத நிலைமைதான் தமிழ்நாடு முழுவதும் இருந்தது.

ஒரு கட்டத்தில் அபூர்வ சகோதரர்கள் படம் ஓடிய திரையரங்குகள் எல்லாம் நிரம்பி வழிந்த நிலையில், மாத்தியோசித்து பார்த்திபன் செய்த ஒரு விளம்பரம் புதிய பாதை படத்துக்கு புது பாதையையே காட்டியது என்று சொல்லலாம். அவர் கொடுத்திருந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் இதுதான். `பெரிய படங்கள்லாம் ரிலீஸாகுது. அதுக்கு டிக்கெட் கிடைக்கலைனா பிளாக்ல டிக்கெட் வாங்காம, வீட்டுக்குப் போகாம என் படத்துக்கு வாங்க.

உங்களைத் திருப்திப்படுத்த முடியும்ங்குற நம்பிக்கை இருக்கு’னு பார்த்திபன் கொடுத்த விளம்பரம் பெரிய அளவில் கைகொடுத்தது. படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட்டானது. சமீபத்தில் இதே போன்று பார்த்திபன் இயக்கத்தில் வெளியான டீன்ஸ் படத்திற்கும் விளம்பரம் கொடுத்து அசரடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top