Categories: Cinema History

அந்த பாட்டால ஸ்ரேயா கோஷல் நொந்துட்டாங்களாம்… ஓ அதான் இப்படியா?

இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் இருந்த கார்த்தியை நடிகராக திசைதிருப்பி விட்ட படம் அமீரின் பருத்திவீரன். இயக்குநர் அமீர், கார்த்திக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்குமே ரொம்ப முக்கியமான படமாக அமைந்துவிட்ட படம்தான் பருத்திவீரன். இந்தப் படத்தில் நடித்ததற்காக ஹீரோயின் பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். பருத்திவீரன் வாய்ப்பு வந்தபோது தயங்கிய கார்த்தியை நடிக்க வைத்தது அவரது தந்தை சிவக்குமார்தான். 2005-ல் ஷூட் தொடங்கி பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது படம். 2006 பாதியில் கிட்டத்தட்ட படம் கைவிடப்படும் சூழல். அப்போது இயக்குநர் அமீரே படத்தைத் தயாரிக்க முடிவு எடுத்தார்.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்த ஷூட்டிங்கில், கிட்டத்தட்ட 60 புதுமுகங்களைப் படம் மூலம் அமீர் அறிமுகப்படுத்தினார். படத்தின் முக்கியமான பலம் யுவனின் இசை. பாடல் வெளியீட்டு விழாவே கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் பருத்தி வீரன் பாடல்களை வெளியிட்டது நடிகர் விஜய்.

மௌனம் பேசியதே, ராம் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அமீர் – யுவன் கூட்டணியில் உருவானது பருத்திவீரன் பாடல்கள். குறிப்பாக ஸ்ரேயா கோஷல் பாடிய `அய்யய்யோ’ பாடல் யுவன் ஸ்பெஷலாக இன்றளவும் கொண்டாடப்படும் பாடல். அந்தப் பாடல் பதிவின்போது ஸ்ரேயா கோஷல் அழுதே விட்டாராம்.

டியூன், வரிகள் எல்லாம் ரெடியான பிறகு ஸ்ரேயா கோஷலை பாட அழைத்திருக்கிறார்கள். அவர் வழக்கமான தனது குரலால் மிரட்டவே செய்திருக்கிறார். ஆனாலும் பாடலில் இயக்குநர் அமீருக்குத் திருப்தியே இல்லையாம். ஹீரோயின் முத்தழகு எட்டாம் வகுப்பைக் கூட தாண்டாத கேரக்டர். இவ்வளவு அழகாகப் பாடினால் அது ஒத்துவராது என பல கரெக்‌ஷன்களை சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார் அமீர். ஒரு கட்டத்தில் தனக்குப் பாட வரவில்லையோ என்று அழுதே விட்டாராம் ஸ்ரேயா கோஷல். அதன்பின்னர், அவரைத் தேற்றி ஒரு வழியாக பாடலைப் பதிவு செய்து முடித்திருக்கிறார்கள்.அந்த பாட்டால ஸ்ரேயா கோஷல் நொந்துட்டாங்களாம்… ஓ அதான் இப்படியா?

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago