சினிமாவுக்கு முன்னரே அம்மாவாக நடித்த திரிஷா... வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!..
தமிழ் சினிமாவில் 20 வருடங்களைக் கடந்து இன்றும் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் திரிஷா. 1999-ல் மிஸ் சென்னை பட்டம் வென்றபோது, சினிமாவில் நடிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தவர்தான் இந்தநிலையில் இருக்கிறார். அவர் பிரபலமாக முக்கியமான காரணம் ஒரு விளம்பரம். அதுவும் துணிச்சலாக அவர் எடுத்த அந்த முடிவுதான் திரிஷாவை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டியிருக்கிறது.
1999-ல் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்தார் திரிஷா. முதன்முதலில் பிரியதர்ஷனின் லேசா லேசா படத்தில் நடிக்க திரிஷாவை அணுகியிருக்கிறார்கள். அதன்பின், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எனக்கு 20 உனக்கு 18 படம். இந்த இரண்டு படங்களும் ரிலீஸாக மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில்தான் சூர்யாவுடன் அவர் நடித்த அமீரின் மௌனம் பேசியதே திரிஷாவுக்கு கோலிவுட்டில் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
2003-ம் ஆண்டு திரிஷாவுக்கு ரொம்ப முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டு வெளியான சாமி படம் அவருக்கு நடிகையாக முக்கியமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது. 2004-க்குப் பிறகு தமிழில் கில்லி, ஆறு எனவும் தெலுங்கில் வர்ஷம், அதாடு எனவும் பிஸியான நடிகையாக மாறினார். அடுத்தடுத்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து, 2024-லிலும் திரிஷா ஹீரோயினாகவே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.
ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையில் இருந்த திரிஷாவுக்கு ஹார்லிக்ஸ் விளம்பர வாய்ப்பு வந்திருக்கிறது. 17 வயதாக இருக்கும் சூழலிலேயே 3 வயதுக் குழந்தைக்கு அவர் அம்மாவாக நடித்திருந்தார். அந்த விளம்பரம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதுதான் திரிஷாவை இந்தியா முழுவதும் பாப்புலாராக்கிய முதல் புள்ளி.
மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு கோலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பது திரிஷாவின் எண்ணமாக இல்லையாம். அவர் மாடலிங்கிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்து இருக்கிறார். விளம்பரத்தால் இன்று கோலிவுட்டில் அசைக்க முடியாத நடிகையாகவே மாறிவிட்டார்.
சில வருடங்களாக தொய்வை சந்தித்து வந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி இருக்கும் நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.