நடிகருக்கு தனது ரூமை கொடுத்துவிட்டு தரையில் படுத்து தூங்கிய கமல்!.. அட அவரா?...
Kamal: ஐந்து வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். பல்வேறு கதாபாத்திரங்கள், வேஷங்கள். தோற்றங்கள் என சினிமாவில் சகலகலா வல்லவனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் ரசிகர்கள் அவரை உலக நாயகன் என அழைத்தார்கள்.
பேசும் படத்தில் பேசாமல் நடித்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமாக வந்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 4 வேடங்களில் வந்து அசத்தினார். விருமாண்டி படத்தி எழுதி, கமலே இயக்கி நடித்தார். அந்த படத்திற்கு கமல் கையாண்ட திரைக்கதை உக்தி இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்லலாம்.
தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் வந்து கலக்கினார். 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த கமல் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விக்ரம் படத்தை கொடுத்தார். பக்கா ஆக்ஷன் திரில்லராக வெளிவந்த இந்த படம் 500 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்த்து.
இந்த படத்தின் வெற்றி கமலின் மார்க்கெட் மதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. 30 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த கமல் இப்போது 100 கோடிக்கும் மேல் வாங்குகிறார். சினிமாவை பொறுத்தவரை படப்பிடிப்பு தளங்களில் ரஜினி, விஜயகாந்த் போன்றவர்கள் எளிமையாக இருப்பதாக சொல்வார்கள். அதேபோல், கமல் உதவி செய்ததாகவோ, எளிமையாக இருந்ததாகவே செய்திகள் வெளிவந்தது கிடையாது. ஆனால், சத்தம் இல்லாமல் கமல் பலருக்கும் உதவியிருக்கிறார்.
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய நிழல்கள் ரவி ‘நிழல்கள் படத்தின் சில காட்சிகளை கமலின் வீட்டில்தான் பாரதிராஜா எடுத்தார். 2 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது. எனவே அந்த 2 நாட்கள் கமல் அவரின் அறையில் தூங்கவில்லை. ஒரு சின்ன அறையில் அதுவும் தரையில் படுத்து தூங்கினார். மேலும், என்னை சந்தித்து எனக்கும் வாழ்த்து சொன்னார்’ என் பேசியிருக்கிறார்.
அப்படி வெளியான நிழல்கள் படம் ஒரு தோல்விப்படம் என்றாலும் நிழல்கள் ரவி பிரபலமானார். அதன்பின் இப்போது வரை பல படங்களிலும் ஹீரோ, காமெடி கலந்த வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி இருக்கிறார். கேஜிப் எப் படத்தில் நிழல்கள் ரவி கொடுத்த டப்பிங்கும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.