இங்கிலீஸ் பாட்ட சுட்டு டியூன் போட்ட இசையமைப்பாளர்!.. அசால்ட் பண்ணிய கண்ணதாசன்!...
Kannadasan: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பத்திரிக்கைகளில் வேலை செய்து வந்த போது சிறுகதைகள் எழுதி பழகினார். சினிமாவில் இவர் நுழைந்தது கதாசிரியராகத்தான். எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் உள்ளிட்ட சில படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.
துவக்கத்தில் எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும் நெருக்கமாகவே இருந்தனர். ஆனால், அரசியல்ரீதியாக இருவருக்கும் ஒத்துவரவில்லை. அதற்கு காரணம் கண்ணதாசன் காங்கிரசை ஆதரித்தவர். எம்.ஜி.ஆரோ திமுகவை ஆதரித்தார். எனவே, அரசியல் மேடைகளில் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசிக்கொண்டனர்.
எம்.ஜி.ஆரை மிகவும் கடுமையாகவே விமர்சித்தார் கண்ணதாசன். இதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் வாலியை தன்னுடன் சேர்த்துக்கொண்டார். எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களை வாலியே எழுதினார். கண்ணதாசனை போல மெட்டுக்கு பாடல் வரிகளை எழுதும் கவிஞர் இதுவரை பிறக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ்.விஸ்வநாதன் எவ்வளவு கஷ்டமான டியூனை வாசித்தாலும் சரி.. அசத்தலாக பாடல் வரிகளை எழுதிவிடுவார் கண்ணதாசன். பல தத்துவ மற்றும் காதல் பாடல்களை எழுதியிருக்கிறார். ஹாலிவுட்டில் இருந்து படங்களை சுடுவது போல பாடல்களை சுடுவது என்பது எம்.ஜி.ஆர் காலத்திலேயே இருந்தது.
அப்படி வல்லவன் ஒருவன் படத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரின் பாடலை சுட்டு வேதா என்கிற இசையமைப்பாளர் ஒரு டியூனை உருவாக்கியிருந்தார். இந்த மெட்டுக்கு எப்படி கண்ணதாசன் பாடல்களை எழுதுவார் என எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது.
ஆனால், அவரோ டியூனை வாசிக்க சொல்லி கேட்டு விட்டு வரிகளை சொன்னார். அப்படி உருவானதுதான் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலாகும். இந்த பாடல் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜெய் சங்கர் ஹீரோவாக நடித்திருந்தார்.