எம்ஜிஆரிடம் நாகேஷ் கேட்ட கேள்வி... சிரிப்பைத் தாங்க முடியாமல் வாத்தியார் சொன்னது இதுதான்..!

by sankaran |   ( Updated:2024-10-31 14:31:03  )
Nagesh MGR
X

புரட்சித்தலைவரின் பல படங்களில் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் நடித்து அசத்தியுள்ளார். தமிழ்சினிமாவில் இந்த அளவுக்குப் புகழ் பெற மக்கள் திலகமும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை.

அப்போது நாகேஷ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க எம்ஜிஆர் வந்துள்ளார். நாடகத்தில் நாகேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் அட்டகாசமாக நடித்துக் கொண்டு இருந்தாராம். அதில் வயிற்றுவலி நோயாளி வேடம் அவருக்கு. நிஜமான நோயாளியாகவே மாறிப் போய் மாஸ் காட்டினாராம்.

எம்ஜிஆர் நாகேஷின் நடிப்பைப் பார்த்து சிரி சிரின்னு சிரித்தாராம். சிரித்து சிரித்தே ஓய்ந்து போனாருன்னா பார்த்துக்கோங்க.

நாடகம் முடிந்ததும் நாகேஷை மேடைக்கு அழைத்து ஒரு கப்பைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய நாகேஷ், எம்ஜிஆரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். என்னன்னா அது தான் ஹைலைட். அப்படி ஒரு கேள்வியை யாருமே கேட்டுருக்க மாட்டாங்க.

'அண்ணே எல்லாரு முன்னாடியும் கப்பைக் கொடுத்துட்டீங்க. அப்புறமா பிடுங்கிற மாட்டீங்களே...'ன்னாராம். அது மட்டுமல்லாமல், 'நான் அவ்வளா ஒண்ணும் நடிக்கல...'ன்னு சொல்லிருக்காரு நாகேஷ். அதைக் கேட்டதும் சிரித்துக் கொண்ட எம்ஜிஆர், 'நீ தான்பா உண்மையான காமெடியன்'னும் மனசார வாழ்த்தினாராம்.

அப்புறம் நாகேஷின் லெவலே வேறன்னு சொல்லலாம். குறிப்பாக சிவாஜி மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தரையே அசரடித்தவர். பாலசந்தர் ரஜினி, கமலைப் பார்த்து அவர்கள் சிரமப்படும் நேரத்தில் நாகேஷ்னு ஒரு நடிகன் இருக்கான். அவன் மட்டும் இந்தக் காட்சியில நடிச்சிருந்தா...ன்னு அடிக்கடி சொல்லி கடுப்பேற்றுவாராம்.

படகோட்டி, நாளை நமதே, அன்பே வா, தாழம்பூ, எங்க வீட்டுப் பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், படகோட்டி, குடியிருந்த கோயில், பணக்காரக் குடும்பம் என பல படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நாகேஷ் நடித்துள்ளார்.

எம்ஜிஆர், நாகேஷ் இருவரும் நடித்த படங்கள் என்றாலே அது சூப்பர்ஹிட் தான். உலகநாயகன் கமலும் கூட நாகேஷின் ரசிகன் தான் நான் என்று ஒருமுறை தெரிவித்துள்ளார்.

Next Story