ஐயோ ஜி..இது நானே இல்ல! உடனே மேக்கப் ரூமுக்குள் போய் எல்லாவற்றையும் கலைத்த அஜித்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:06  )

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது அவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே அவருடைய நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் அதன் படப்பிடிப்பு ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்தையும் தாண்டி விட்டது.

இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. ஆரம்பத்தில் இருந்து படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வந்தன. இப்போது படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ரிலீஸ் தேதி எப்பொழுது என்பதைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் மேக்கப் ஆர்டிஸ்டாக பணிபுரிந்த ஒருவர் அஜித்தின் லுக்கை பற்றிய ஒரு சீக்ரெட்டை பகிர்ந்து இருக்கிறார். படத்தின் ஒரு போஸ்டரில் திரிஷா ஒரு சேரில் உட்கார்ந்திருக்க அவருக்கு பின்னாடி அஜித் தோளில் கை போட்டு நிற்கும் மாதிரியான ஒரு போஸ்டர் வெளியானது.

அதில் அஜித் கருநிற முடியுடன் மிகவும் இளமையாக காணப்பட்டார். அந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது தலைமுடியை கருப்பு நிற டை அடித்துக் கொண்டு செட்டிற்குள் வந்த அஜித்தை பார்த்து அனைவரும் வாயடைத்துப் போனார்களாம் .அந்த அளவுக்கு அழகாக இருந்தாராம் அஜித்.

ஆனால் அஜித்துக்கு அப்படி இருப்பதற்கே பிடிக்கவே இல்லை. சீக்கிரம் வாஷ் பண்ணிவிட்டு தன்னுடைய ஒரிஜினல் ஹேருடன் இருக்க வேண்டும் என்றுதான் அஜித் கூறிக் கொண்டே இருந்தாராம். அது ஒரு ஃப்ளாஷ் பேக்கில் வரும் சம்பவம். அதனால் அது சம்பந்தமான போஸ் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக ஹோட்டலுக்கு சென்று அவருடைய தலையை வாஷ் செய்துவிட்டு வந்தாராம் அஜித்.

இது நானே கிடையாது. இப்படி இருப்பது எனக்கு பிடிக்கலை என அந்த ஷூட் முடியும் வரை சொல்லிக் கொண்டே இருந்தாராம் அஜித். எப்பொழுதுதான் சூட் முடியும் என காத்திருந்து உடனே போய் தன் தலையை வாஷ் செய்துவிட்டு வந்தார் என அந்த மேக்கப் ஆர்டிஸ்ட் கூறினார்.

Next Story