கோடிக்காக சர்ச்சையில் சிக்குவதை விட அஜித் மாதிரி இருங்க! பிரபலம் சொன்ன சுவாரஸ்ய தகவல்

by ராம் சுதன் |

சமீபத்தில் செம்பருத்தி டீ விஷயத்தில் சிக்கிய நயன்தாரா பற்றிய செய்திதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ரசிகர்களை தவறான வழியில் வழி நடத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் சோசியல் மீடியாவில் இதை பற்றி கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஊட்டச்சத்து நிறுவனர்களும் அலோபதி மருத்துவர்களும் கூட இதை பற்றி வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படி ஒரு ப்ராடக்ட் பற்றி தெரியாமல் பணத்திற்காக நடித்து சர்ச்சையில் சிக்குவதை விட அதில் நடிக்காமலேயே இருக்கலாம். இதற்கு ஒரு உதாரணமான சம்பவத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

அதாவது அஜித் ஜீ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் பெப்சி கம்பெனியின் தாக்கம் தமிழ் நாட்டில் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் தமிழ் நாட்டில் பெப்சியை பெரிய அளவில் விளம்பரபடுத்த அந்த நிறுவனம் நினைத்திருக்கிறது.

அதனால் அந்த விளம்பரத்தில் நடிக்க அஜித்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் அஜித்தோ பெப்சி நான் குடிப்பதில்லை என்றும் அதை பற்றி தெரியாமல் என்னால் அந்த விளம்பரத்தில் நடிக்க முடியாது என்றும் கூறிவிட்டாராம்.

இருந்தாலும் அந்த நேரத்தில் அஜித் கொஞ்சம் பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும் ரசிகர்களின் நலன் கருதி ஒரு கோடி கொடுத்தாலும் வேண்டாம் என மறுத்துவிட்டாராம். ஆனால் அதற்கு முன் ஒரு காஃபி விளம்பரத்தில் நடித்திருக்கிறார் அஜித். அதற்கு காரணம் அந்த காஃபியைத்தான் அவர் வழக்கமாக குடிப்பாராம்.

அதனால் தான் அந்த காஃபி விளம்பரத்தில் நடித்தாராம் அஜித். இந்த மாதிரி எல்லா நட்சத்திரங்களும் புரிந்து கொள்ள வேண்டும். நயன்தாராவும் இதை புரிந்து கொள்ள வேண்டும் என அந்த பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார்.

Next Story