ரஜினி, கமலுக்கு பிறகு அஜித்தான்! அடிச்சு சொன்ன கன்னக்குழி நடிகர்.. இவரே சொல்லிட்டாரே
நடிகர் பிரபு அஜித்தை பற்றி கூறியதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதாவது தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் என்பது காலங்காலமாக நடந்து வரும் ஒன்றாக இருக்கிறது. அதில் ஒரு சில நடிகர்கள் ஜெயித்திருக்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் இருந்த இடம் இல்லாமல் போயிருக்கின்றனர்.
அந்த வகையில் நடிப்பிற்கே இலக்கணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பில் அவர் அடைந்த சாதனைகள் ஏராளம். அவருடைய வாரிசான பிரபு இந்த சினிமாவில் அறிமுகமான போது சிவாஜியின் மகன் என்ற வகையில் பிரபுவிடம் பேசவே பயந்தார்களாம்.
சொல்லப்போனால் அவர் கிட்ட நெருங்கவே தயங்கினார்களாம். அந்தளவுக்கு சிவாஜி மீது மரியாதை கலந்த பயம் இருந்தது. ஆனால் அப்படி இருந்தவர்கள் மத்தியில் நடிகர் ரஜினி மற்றும் கமல் இவர்கள்தான் பிரபுவை வரவேற்று உபசரித்திருக்கிறார்கள்.
மேலும் பிரபு திரும்ப போகும் போது அவருடனேயே கார் வரை வந்து வழியனுப்புவார்களாம். இந்த ஒரு பண்பு ரஜினி , கமலுக்கு அடுத்தபடியாக அஜித்திடம்தான் நான் அதை பார்த்தேன் என ஒரு பேட்டியில் கூறியிருப்பதாக அந்த செய்தி வைரலானது.
அவர் சொல்வதை பார்க்கும் போது உண்மையாகத்தான் இருக்கிறது. அஜித்தின் அப்பா இறந்த சமயம் கூட சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி திரும்ப வரும் போது சூர்யாவையும் கார்த்தியையும் வெளியில் வந்து கார் வரை வழியனுப்பி வைத்தார் அஜித்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதைப் போல சமீபத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறும் போதும் கூட ‘என்னை மட்டும் அல்ல. என்னுடன் வந்தவர்களின் ஒவ்வொரு காரையும் திறந்து விட்டு எங்களை வழியனுப்பினார் அஜித்’ என கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு பண்பு ஒரு சில பேரிடம் மட்டும்தான் இருக்கும். அது நடிகர் அஜித்திடம் அதிகமாகவே இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு உதாரணம்.