வெளிநாட்டு நபர் போட்ட ஒரு பதிவு! உலகளவில் பிரபலமான அஜித்.. என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க
அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விட இந்த புகைப்படம் அதிக லைக்ஸ்களை வாங்கியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். கோலிவுட்டில் ஒரு ஹேண்ட்ஸமான ஹீரோவாக ஸ்டைலிஷான ஹீரோவாக வலம் வரும் அஜித்தை பிடிக்காதவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். பல முன்னணி நடிகைகளுக்கும் பிடித்தமான ஹீரோவாக அஜித் திகழ்ந்து வருகிறார்,
அஜித்தை பற்றி எந்த நடிகைகளிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ஜெண்டில்மேன் என்பதுதான். நடிகைகளின் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருப்பவர் அஜித். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்ததாக ஐதராபாத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
வரும் 29 ஆம் தேதி ஐதராபாத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். 12 நாள்கள் மட்டுமே இன்னும் படப்பிடிப்பு இருக்கும் நிலையில் அதன் பிறகு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடக்ஷனில் படக்குழு இறங்கிவிடும். இதற்கு அடுத்தபடியாக அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் குட் பேட் அக்லி படத்தில் பிஸியாகி விடுவார்.
இந்த நிலையில் அஜித்தை பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி வெளியாகி சோசியல் மீடியாக்களில் டிரெண்டிங்காகி வருகிறது. நேற்று கூட அஜித் புதியதாக ஒரு ஃபெராரி காரை வாங்கியது தொடர்பாக அது சம்பந்தமான புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் இன்றும் அஜித்தை பற்றிய ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. அதாவது ஒரு வெளி நாட்டு நபர் அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். உலகளவில் பிரபலமான ஒரு சீரிஸ்தான் Ben 10. இது ஒரு அனிமேட்டட் சீரிஸ். இதில் grandpa max என்ற ஒரு கேரக்டர் அமைந்திருக்கும்.
கிட்டத்தட்ட அந்த தாத்தாவை போல்தான் அஜித் இருக்கிறார் என அஜித்தின் புகைப்படத்தை பார்த்து அந்த வெளிநாட்டு நபர் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு வெளியானதில் இருந்து அதிக லைக்ஸ்களை அள்ளி வருகின்றது. சொல்லப்போனால் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விட இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ்கள் வந்துள்ளதாக தெரிகிறது.