அடுத்த வருடம் தல பொங்கல் தான்! ஆனால் ‘குட் பேட் அக்லி’ இல்லையாம்.. வச்சாங்க ஒரு ட்விஸ்ட்
சமீப காலமாக அஜித்தின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விதவிதமான போஸ்களில் அஜித்தின் புகைப்படம் அவருடைய ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை பற்றி கேட்டு வரும் ரசிகர்களுக்கு இது ஒரு ஆதரவாக தான் இருக்கும்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கையில் டாட்டூவுடன் கொடுத்த போஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. குட்பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவரை இல்லாத அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவருடைய காஸ்ட்யூமிலிருந்து அவருடைய தோற்றம் வரை அனைத்துமே வித்தியாசமாக தெரிகிறது.
லோக்கல் ஹீரோ மாஸாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதைப் போல அவருடைய லுக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனியில் எப்படி கலர் கலர் ஆடையில் விஷாலையும் எஸ் ஜே சூர்யாவையும் ஆதிக் ரவிச்சந்திரன் காட்டினாரோ அதே மாதிரியான ஒரு ஸ்டைல்தான் இந்த படத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் அஜித் கருப்பு வெள்ளை நிற கோட்டில் தான் படத்தில் வருவார். ஆனால் குட் பேட் அட்லி படத்தில் விதவிதமான கலரில் ஆடை அணிந்திருக்கும் மாதிரியாக தெரிகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என சொல்லப்பட்டது.
ஆனால் படத்தின் ரிலீசிலும் இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அவருடைய விடாமுயற்சி திரைப்படம் எப்போது வரும் என்றே தெரியவில்லை. படத்தில் எல்லா வேலைகளும் முடிந்த நிலையில் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றது விடாமுயற்சி திரைப்படம் .
குட் பேட் அக்லி திரைப்படத்தின் பூஜை சமயத்திலேயே பொங்கல் ரிலீஸ் என ஆதிக் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் இப்போது அந்த ரிலீஸ் தேதியிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். ஏனெனில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் சாட்டிலைட் டிஜிட்டல் வியாபாரம் இன்னும் முடியவில்லையாம்.
யாரும் அந்த படத்தை வாங்கவில்லையாம். அதனால் அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனால் அந்த தேதியில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் அடுத்த வருடம் பொங்கல் தல பொங்கல் தான் என உறுதியாக சொல்லலாம்.