பிரதீப் ரங்கநாதனோட மனசுல இவ்ளோ பாரமா? டீசன்டா அதைச் சொல்லிட்டாரே!

லவ் டுடேவில் நடித்தும், இயக்கியும் பிரதீப் ரங்கநாதன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் தற்போது டிராகன் படத்தில் நடித்துள்ளார். இதற்கான ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் கலந்து கொண்டு அவர் பேசியது இதுதான்.
டிராகன்: அரியர் மாஸ் இல்ல. படிச்சா தான் மாஸ். எங்க அப்பா என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சதால தான் எனக்குக் கோமாளின்னு ஒரு படமே கிடைச்சது. படிப்பு, கத்துக்குறதுதான் முக்கியம். அந்த மாதிரி ஒரு நல்ல விஷயத்தைத் தான் இந்தப் படம் சொல்லுது.
சில பேரு முன்னாடி பார்த்து சிரிப்பாங்க. பின்னாடி போய் முறைப்பாங்க. ஆனா முன்னாடி, பின்னாடி எல்லாம் நல்லதே செய்றவங்க நம்ம அம்மா அப்பா மட்டும்தான். அதைத் தான் டிராகன் சொல்லுது.
அடிக்கவும் செய்றாங்க: சில பேரு நம்மளை அடிக்கவும் செய்றாங்க. அதை நான் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஆனா அது யாரு? எதுக்கு அதுக்கு உள்ளே போக வேண்டாம். ஆனா நான் அவங்களுக்கு ஒண்ணுதான் சொல்ல விரும்புறேன். ஒரு செடி வளரும்போது சில பேரு வந்து அதோட இலையைப் பிச்சிப் போட்டுட்டுப் போவாங்க.
கீழே வளரும்: காம்பை உடைச்சிப் போட்டுட்டுப் போவாங்க. சில பேர் மிதிச்சிப் போட்டுட்டுப் போவாங்க. ஆனா அந்த டைம்ல எல்லாம் அந்தச் செடியோட வேரு கீழே வளர்ந்துட்டு ஸ்ட்ராங்கா ஆகிட்டுப் போய்க்கிட்டே தான் இருக்கும்.
அது மட்டும் இப்ப கொடுக்குற வலியை எல்லாம் தாங்கிடுச்சுன்னா அப்புறம் அது பெரிய மரமா வளர்றதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நேரத்துல அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றுற எல்லாருக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆனா இந்தப் பேச்சைப் பார்க்கும்போது எவ்வளவு வலியைத் தாங்கி இருக்காரு? ஆனா இதுக்கெல்லாம் யார் காரணம்னு தான் தெரியல அப்படின்னு நம்மைக் கேட்க வச்சிட்டாருப்பா பிரதீப் ரங்கநாதன்.